ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

டூரிங் டாக்கீஸ்.. சினிமா நினைவுகளை மட்டுமே சுமந்து நிற்கும் அந்தக்கால திரையரங்குகள்..

டூரிங் டாக்கீஸ்.. சினிமா நினைவுகளை மட்டுமே சுமந்து நிற்கும் அந்தக்கால திரையரங்குகள்..

திரையரங்கம்

திரையரங்கம்

பல்வேறு வரலாற்று திரைபடங்களை திரையி்ட்டு மக்களை மகிழ்வி்த்து திரையரங்குகள் தற்போது தங்களின் அடையாளத்தை இழந்து, மெல்ல மெல்ல சிதைந்து வருகின்றன.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Rasipuram, India

உலகி்ல் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது பழமொழி. இதனை நிரூபிக்கும் வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா திரைப்படங்கள் மூலம் மக்களின் கண்களுக்கு விருந்தளித்து வந்த திரையரங்குகள் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் மாற்றத்தால் இன்று தனது பொழிவை இழந்து காணப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வரலாற்றுச் சின்னங்களாக காட்சியளிக்கும் இந்த பழைய திரையரங்குகள் இன்று பலருக்கு  மலரும் நினைவுகள் தான். நாடு சுதந்திரம் பெற்ற காலகட்டங்களில், மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் என்பது திண்ணை விவாதங்களும்,  நாடகங்கள் மட்டுமே, இதனை தொடர்ந்து திரைப்படங்கள் மக்களின் எண்ணத்தை கவர்ந்து மனதில் இடம் பெற்றன.

சினிமா துறைக்கு பெயர் பெற்ற நகரமாக ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக திகழந்த காலகட்டத்தில், திரைத்துறை ஜாம்பவான்கள் பலர் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பதால், இதனையொட்டியுள்ள நகரங்களில், நாடகங்களும், திரையரங்குகளும் சிறந்து விளங்கின.

இதனை தொடர்ந்து ராசிபுரம் பகுதியில் டூரிங் டாக்கீஸ்கள் என்ற பெயரில் கீற்று கொட்டைகள் பல உருவாகின. இதில் பல்வேறு இதிகாச கால நாடகங்கள் நடத்தப்பட்டுள்ளன.  மக்கள் சிந்தனையை தூண்டும் திரைப்படங்கள் பலவும் திரையிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : நாமக்கல் முட்டைக்கு அதிகரித்த திடீர் மவுசு - காரணம் இதுதான்!

பிற்காலத்தில் பெயர் பெற்ற பல நடிகர்கள் ராசிபுரம் நகரில் டூரிங் திரையரங்குகளில் நாடகங்கள் நடத்தியுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், டி.எஸ்.பாலைய்யா, எம்.ஆர்.ராதா, டனால் தங்கவேல், தியாகராஜ பாகவதர், டி.கே.சம்பங்கி, பி.ஆர்.பந்துலு போன்றோர். இவர்கள் நடித்த நாடகங்கள் அப்போதை மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றன. பின்னர் படிபடியாக திரைப்படங்களில் நவீன் தொழில்நுட்பம் வளர வளர கூடவே தார்சு கட்டிடத்திலான திரையரங்குகள் பல உருவாகின.

ராசிபுரம் நகரில் உருவான இதுபோன்ற திரையரங்குகளில் திலகம் டூரிங் டாக்கீஸ், பாலசுப்ரமணியா திரையரங்கு, பாரதி திரையரங்கு, கிருஷ்ணா சினிடோன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த திரையரங்குகளில் இதிகாச, இலக்கிய, காதல் காப்பியங்கள், மன்னர் காலத்து வரலாற்று கதைகள், கண்ணீர் காவியங்கள், சமுதாய சீர்திருத்த கதைகள் என மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பல படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : நடிகை சரோஜா எப்படி திரைத்துறைக்கு வந்தார் தெரியுமா..?

ராசிபுரம் நகரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற நாடகங்களையும், திரைப்படங்களையும் மக்களுக்கு படம்பிடித்துக் காட்டிய பல திரையரங்குகள் தற்போது தனது அடையாளங்களை இழந்து வரலாற்று நினைவுகளை தனது பழைய கட்டிடங்களில் சுமந்தவாறு மட்டுமே காட்சியளிக்கின்றன.  ஒரு சில திரையரங்குகள் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளன. சில நவீன வணிக வளாகங்களாக உருமாறியுள்ளன. இங்கு திரையிடப்பட்ட பல படங்கள் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவை.

லவகுசா, தசாவதாரம், ராமயாணம், நல்லதங்காள், அரிசந்திரா, பவளக்கொடி, பக்தபிரகலாதா, சதி சுகன்யா, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி,  போன்ற இதிகாச காவியங்களை மக்களுக்கு திரையி்ட்டு காட்டிய பெருமை இந்த திரையரங்குகளுக்கு உண்டு.

பராசக்தி, தங்கமலை ரகசியம், மன்னாதி மன்னன், குலேபகாவலி, மருதநாட்டு இளவரசி, பாக்தாத் திருடன், மந்திரிகுமாரி என நீண்டு கொண்டே போகும். இது போன்ற பல்வேறு வரலாற்று திரைபடங்களை திரையி்ட்டு மக்களை மகிழ்வி்த்து திரையரங்குகள் தற்போது தங்களின் அடையாளத்தை இழந்து, மெல்ல மெல்ல சிதைந்து வருகின்றன. அந்தகால இளைஞர்களுக்கு இந்த நினைவு இன்றும் இனிமைதான்.

தற்போது, நாமக்கல் சாலையில் உள்ள பாரதி திரையரங்கு, புதுப்பாளையம் செல்லும் உள்ள கிருஷ்ணா சினிடோன் தற்போது இடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ராசிபுரம் புதிய நிலையம் அருகே இருந்த பாலசுப்ரமணியா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே டிபார்மெண்ட ஸ்டோராக மாறிவிட்டன. அதேபோல், பல ஆண்டுகளுக்கு முன்பே திலகம் டூரிங் டாக்கீஸ் இருந்த இடமே தெரியவில்லை.

செய்தியாளர் :  சுரேஷ் (ராசிபுரம்)

First published:

Tags: Entertainment, Kollywood, Local News, Tamil movies, Theatre