Home /News /namakkal /

7-வது திருமணத்தில் வசமாக சிக்கிய கல்யாண ராணி... ஸ்கெட்ச் போட்டு சிக்க வைத்த 6வது கணவர்

7-வது திருமணத்தில் வசமாக சிக்கிய கல்யாண ராணி... ஸ்கெட்ச் போட்டு சிக்க வைத்த 6வது கணவர்

மோசடியில் ஈடுபட்டவர்கள்

மோசடியில் ஈடுபட்டவர்கள்

6 திருமணங்கள் செய்து மணமகன்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய பெண், 7வது திருமணத்தின் போது வசமாக சிக்கினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டம், கள்ளிபாளையத்தை சேர்ந்த தனபாலுக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியாவிற்கும் கடந்த 7ம் தேதி கோயிலில் திருமணம் நடந்துள்ளது. புரோக்கர் மூலம் இத்திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சகோதரியும் அவரது கணவர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த திருமணத்திற்காக தனபாலிடம் இருந்து புரோக்கர் பாலமுருகன் ரூ. 1.5 லட்சம் கமிஷன் பெற்றுள்ளார்.

    செப்டம்பர் 7ம் தேதி திருமணம் நடந்த நிலையில், இரண்டே நாளில் சந்தியா மாயமானார். சந்தியா, அவரது உறவினர், புரோக்கர் ஆகிய 4 பேரின் செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து,  ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனபால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கு, புரோக்கர் மூலம் பெண் பார்த்தபோது சந்தியாவின் படம் வந்துள்ளது. அதனை கண்டு உஷாரான தனபால் குடும்பம், மோசடி மணமகளை பிடிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மணமகனுக்கு, மணமகளை பிடித்திருப்பதாக கூறி, செல்போனிலேயே திருமணம் பேச வைத்துள்ளனர்.

    இதையும் வாசிக்க: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் இரட்டை குழந்தைகள் உயிரிழந்ததாக தந்தை வேதனை

    திருமண நாளன்று, திருச்செங்கோட்டிற்கு காரில் வந்த சந்தியாவையும், அவர் உடன் வந்த மூவரையும் தனபால் குடும்பத்தினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சந்தியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னுடைய குழந்தையை கடத்தி வைத்துக்கொண்டு புரோக்கர் பாலமுருகன் இத்தகைய செயல்களில் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார். இந்த திருமண மோசடி குறித்து பரமத்தி வேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    - ரவிச்சந்திரன் ராஜகோபால், செய்தியாளர்
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Crime News, Marriage, Namakkal

    அடுத்த செய்தி