முகப்பு /செய்தி /நாமக்கல் / முட்டை விலை தொடர் சரிவு... நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் கவலை!

முட்டை விலை தொடர் சரிவு... நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் கவலை!

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal Egg | உச்சத்தை தொட்ட முட்டையின் விலை தொடர் சரிவை சந்தித்து வருவதால் கவலையடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல்லில் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் கோழி பண்ணையாளார்கள் கவலையடைந்துள்ளனர்.

நாமக்கல்லில் தேசிய  முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை 30 பைசா குறைந்து ரூ 4.60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற மண்டலங்களில் விலை குறைந்துள்ளதாலும், தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லாததால் மற்ற மண்டலங்களுக்கு முட்டை தேவை இல்லை என்பதாலும் முட்டையின் விலை குறைந்துள்ளது. மேலும், மழைக்காலம் மற்றும் குளிர் காலம் என்பதால் முட்டை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கேரளா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் செல்லும் முட்டை எண்ணிக்கை குறைந்துள்ளது. வட மாநிலங்களில் தொடர் மழை காரணமாக முட்டைகளை விரும்பி சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏற்கனவே ஏற்றுமதி உயர்ந்து இருந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு சில பண்ணையாளர்கள் மட்டுமே முட்டைகளை உற்பத்தி செய்கின்றனர். இந்த காரணங்களை மேற்கோள் காட்டி பண்ணையாளர்கள் மத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த 30 பைசா விலை குறைவை நிர்ணயித்துள்ளது.

கடந்த சில நாட்களாக முட்டையின் விலை குறைந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 105 பைசா விலை குறைந்துள்ளது. உச்சத்தை தொட்ட முட்டையின் விலை ஒரு வாரத்தில் சரிவை சந்தித்ததால், கோழி பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதே போன்று கறிக்கோழியின் விலையும் ரூ.90க்கும், முட்டை கோழியின் விலை ரூ.84க்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்: ரவிக்குமார், நாமக்கல்.

First published:

Tags: Egg, Local News, Namakkal