ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

நாமக்கலில் ஏடிஎம் மையத்தை உடைத்து பேட்டரிகள் திருட்டு - சிசிடிவி காட்சியில் சிக்கிய கொள்ளையன்

நாமக்கலில் ஏடிஎம் மையத்தை உடைத்து பேட்டரிகள் திருட்டு - சிசிடிவி காட்சியில் சிக்கிய கொள்ளையன்

பேட்டரியை திருடும் கொள்ளையன்

பேட்டரியை திருடும் கொள்ளையன்

Namakkal Atm Theft | ஏடிஎம் உடைத்து உள்ளே புகுந்து பேட்டரியை திருடிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

பள்ளிபாளையத்தில் தனியார் ஏடிஎம் மையத்தை உடைத்த கொள்ளையன் உள்ளே சென்று பேட்டரிகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ் பகுதியில் ஹிட்டாச்சி என்கிற தனியார் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்தில் பொங்கல் அன்று மதியம் 2 மணி அளவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்திற்கு பின் இருந்த கதவை உடைத்து உள்ளே சென்று இரண்டு யுபிஎஸ் பேட்டரிகளை திருடி சென்றுள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக தனியார் ஏடிஎம் மையத்தின் மேலாளர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Namakkal, Tamil News