முகப்பு /செய்தி /நாமக்கல் / மீண்டும் ஓர் உயிர் பலி.. நாமக்கல் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மீண்டும் ஓர் உயிர் பலி.. நாமக்கல் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு

தற்கொலை செய்து கொண்ட ரியாஸ் கான்

தற்கொலை செய்து கொண்ட ரியாஸ் கான்

Namakkal Online Rummy Sucide | தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் இளைஞர்கள் அதிகளவில் தற்கொலை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கலில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் ஆற்றில் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் கான். இவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை அதிகளவில் விளையாடி அதற்கு அடிமையாகியுள்ளார்.

இந்த நிலையில் இன்று ஈரோட்டில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ரியஸ் கான், காவிரி ஆற்றில் செல்லும் பழைய பாலத்தின் மீது இரு சக்கர வாகனத்தில் நிறுத்தி விட்டு தீடிரென பாலத்தின் மீது நின்று குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இதையடுத்து வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள் கடந்த இரண்டு மணி நேரம் போராடி ரியஸ் கான் உடலை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் ஆன்லைன் ரம்மியால் ரியஸ் கான் தற்கொலை செய்துகொண்டது பள்ளிபாளையம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் இளைஞர்கள் அதிகளவில் தற்கொலை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

செய்தியாளர்: ரவிச்சந்திரன் ராஜகோபால்

First published:

Tags: Local News, Namakkal, Online rummy