ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

காலில் கட்டப்பட்ட கயிறு.. சீறிப்பறக்கும் சேவல்.. வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் சேவல்பிடி போட்டி!

காலில் கட்டப்பட்ட கயிறு.. சீறிப்பறக்கும் சேவல்.. வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் சேவல்பிடி போட்டி!

பெண்கள் கலக்கும் நவீன ஜல்லிகட்டு

பெண்கள் கலக்கும் நவீன ஜல்லிகட்டு

Namakkal unique jallikattu | காளைகளை அடக்கும் போட்டிக்கு ஜல்லிகட்டு என்பதை போல், சேவலை பிடிக்கும் இந்த போட்டிக்கு நவீன ஜல்லிக்கட்டு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ளும் சேவல் பிடிக்கும் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நந்தவனம் தெரு பகுதியில் ஆண்டுதோறும் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கி வருகின்றனர்.

பெண்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு திடலில்  வட்டம் வரைந்து அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப்பார்கள். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு அவரது ஒரு காலில் கயிறு கட்டப்படும் கயிறின் மற்றொரு முனை சேவலின் ஒரு காலில் கட்டப்படும்.

வட்டத்தை தாண்டாமல் போட்டியாளர் கோழியை பிடிக்க வேண்டும் என்பதே இந்த போட்டியின் விதி. குறிப்பிட்ட நேர அளவிற்குள் கோழியை பிடிக்க வேண்டும் என்பதும்  சேவலை  பிடிக்கச் செல்லும்போது வட்டத்தை தாண்டி சென்று விட்டாலோ அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் கோழியை பிடிக்க முடியாமல்  இருந்தாலோ அவர்கள் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார்கள்.

குறிப்பிட்ட கால அளவுக்குள் வட்டத்தை தாண்டாமல் சேவல் பிடிப்பவர்கள் வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள். இந்த போட்டியில் குழந்தைகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு கோழியை  பிடித்தனர்.

மாடுகளை பிடிப்பது ஜல்லிக்கட்டு போட்டி என்றால் சேவலை பிடிப்பது நவீன ஜல்லிக்கட்டு போட்டியாகும் இந்த போட்டிக்கு திருச்செங்கோடு பகுதியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா கெடுபிடிகளால் இந்த போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த விளையாட்டு களைகட்ட தொடங்கியுள்ளது.

First published:

Tags: Jallikattu, Local News, Namakkal