முகப்பு /செய்தி /நாமக்கல் / மனைவியின் கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய கணவர்.. ஆதாரத்தை அழிக்க செல்போனை எரித்த கொடூரம்!

மனைவியின் கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய கணவர்.. ஆதாரத்தை அழிக்க செல்போனை எரித்த கொடூரம்!

கொலை செய்தவர்

கொலை செய்தவர்

Namakkal Murder | கள்ளக்காதலை கைவிட மனைவி மறுத்ததால், ப்ளான் போட்டு கணவர் கள்ளக்காதலனை கொலை செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் எரும்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி மண்கரடு அருந்ததியர் பகுதியை சேர்ந்த சசிக்குமார்(25) தனியார் பைனான்ஸில் கடன் வசூல் செய்யும் பணியை செய்து வந்தார். இவர் கடந்த 27ஆம் தேதி போடிநாயக்கன்பட்டியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும்,3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (27),நித்திஷ் (23),விக்கி (21),சீனிவாசன் (33) ஆகிய 4 பேரை போலீசார் சந்தேகத்தின் போரில் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்ததை 4 பேரும் ஒப்பு கொண்டனர். மேலும், காரணத்தை கேட்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கைது செய்யப்பட்ட சீனிவாசன் என்பவரின் மனைவிக்கும், கொலை செய்யப்பட்ட சசிக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தகாத உறவில் இருந்ததை அறிந்த சீனிவாசன் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் மனைவியோ கோபித்து கொண்டு சீனிவாசனை விட்டு சென்றதால் தனிமையில் வாடிவந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமான சசிக்குமாரை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டிய சீனிவாசன், நண்பர்களுக்கு பணம் கொடுத்து, ஆள் திரட்டி கொலை செய்ய தயாராகினர்.

அதன்படி சசிக்குமாரை தனியாக வரவழைத்து, மது வாங்கி கொடுத்து, அவரை போதையின் உச்சிக்கு தள்ளிய பிறகு கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். தொடர்ந்து சீனிவாசன் சட்டையில் ரத்தக்கரை படிந்ததால் சட்டையையும், செல்போனையும் எரித்து விட்டு சென்றுள்ளனர்.

இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து போலீசார் சீனிவாசன் மற்றும் அவர்களது நண்பர்கள் 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ரவிக்குமார், நாமக்கல்

First published:

Tags: Illegal affair, Local News, Murder, Namakkal