ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

நாமக்கல் பட்டாசு விபத்து... உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

நாமக்கல் பட்டாசு விபத்து... உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

நாமக்கல் தீ விபத்து

நாமக்கல் தீ விபத்து

நாமக்கல் அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அடுத்த மோகனூர் மேட்டு தெருவைச் சேர்ந்த தில்லை குமார், நாட்டு பட்டாசு விற்பனை செய்து வருகிறார். புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு விற்பனைக்காக வாங்கி வந்த ஒரு டன் பட்டாசை, தனது வீட்டின் அருகே உள்ள கிடங்கில் வைத்திருந்தார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. பயங்கர வெடி சத்தம் கேட்க அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். கிடங்கு தீப்பிடித்து எரிவதை கண்ட அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நாமக்கல் மற்றும் பரமத்தியில் இருந்துவந்த தீயணைப்பு வீரர்கள் போராடி, தீயை அணைத்தனர். பட்டாசு விபத்தில் சிக்கி தில்லை குமார், பிரியா, செல்வி, பெரியக்காள் ஆகியோர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், இச்சம்பவத்தை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சம் வழங்குவதுடன், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, Fire crackers