முகப்பு /செய்தி /நாமக்கல் / சித்தப்பாவை வீடு புகுந்து குத்திக்கொன்ற மகன் - நாமக்கல்லில் பயங்கரம்

சித்தப்பாவை வீடு புகுந்து குத்திக்கொன்ற மகன் - நாமக்கல்லில் பயங்கரம்

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

Namakkal murder | நிலத்தகராறில் சொந்த சித்தப்பாவை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல்லில் நிலத்தகராறில் தொழிலாளி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 36)  கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு தன்ஷிகா (11) என்ற மகளும், சூர்யா (9) என்கிற மகனும் உள்ளனர். ஆறுமுகத்திற்கும் அவரது அண்ணன் முருகன் குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இரு குடும்பத்தினருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இதை கேள்விப்பட்ட ஆறுமுகம் துக்கம் விசாரிக்க நேற்று முன்தினம் அண்ணன் முருகன் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். அப்போது அண்ணன் மகன் விஜய் அவரிடம், ஏன், இங்கு வந்தீர்கள்? எனக்கேட்டு தகராறு செய்தார்.இதையடுத்து அங்கிருந்த உறவினர்கள் சமரசம் செய்து ஆறுமுகத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இரவு ஆறுமுகம் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் கதவை தட்டும் சத்தம் கேட்டு ஆறுமுகம் கதவை திறந்து உள்ளார். அப்போது மர்ம நபர்கள் கத்தியால் ஆறுமுகத்தை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆறுமுகத்தை மீட்டு அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், நிலத்தகராறில் முருகனின் மகன் தான் ஆறுமுகத்தை அவரது நண்பர்களோடு கொலை செய்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, முருகனின் மகன் விஜய் ( 19) அவரது நண்பர்கள்,  இன்பதமிழன் (20), மணிகண்டன் (21)  மற்றும் 2 சிறாரகள் உடபட ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ஆர் ரவிக்குமார், நாமக்கல்.

First published:

Tags: Crime News, Local News, Murder, Namakkal, Tamil News