முகப்பு /செய்தி /நாமக்கல் / நாமக்கல் முட்டைக்கு அதிகரித்த திடீர் மவுசு - காரணம் இதுதான்!

நாமக்கல் முட்டைக்கு அதிகரித்த திடீர் மவுசு - காரணம் இதுதான்!

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal District News : உலக கோப்பை கால்பந்து போட்டியின் எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Namakkal, India

கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி காரணமாக முட்டைக்கு பெயர் பெற்ற நாமக்கல்லிருந்து  அதிகளவில் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு நாடுகளுக்கு மாதத்திற்கு 2 கோடி முட்டைகள் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கத்தாருக்கு மாதந்தோறும் 50 லட்சம் மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், தற்போது கத்தார் நாட்டில் உலக கால்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது. இதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவிந்துள்ளனர்.

இதையும் படிங்க : 9 குழந்தைகளுடன் சைக்கிளில் பயணித்த நபர் - வைரலாகும் வீடியோ.!

top videos

    இதனால் அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகரித்து 1 கோடியே 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    First published:

    Tags: Egg, FIFA World Cup 2022, Namakkal