Home /News /namakkal /

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை - நாமக்கல் மருத்துவரின் சேவை..!

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை - நாமக்கல் மருத்துவரின் சேவை..!

மருத்துவர் ஷியாம் சுந்தர் - நாமக்கல்

மருத்துவர் ஷியாம் சுந்தர் - நாமக்கல்

Namakkal | நாமக்கல் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மருத்துவர் ஷியாம் சுந்தர் என்பவர் அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர்தர  சிகிச்சைகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த தினம் ஆகும். அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ஷியாம் சுந்தர் என்பவர் தன்னுடைய மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ள ஏழை-எளிய மக்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற சிகிச்சைகளை இலவசமாக வழங்கி உள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் லேப்ராஸ்கோபி முறையில் கர்ப்பப்பை அகற்றம், வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி என்ற விவசாயிக்கு உயர்தரமான செயற்கை மூட்டு கொண்ட மூட்டு மாற்று ஆகிய அறுவை சிகிச்சைகளையும், பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியை சேர்ந்த இராமசாமி என்ற தொழிலாளிக்கு விபத்தினால் அகற்றப்பட்ட காலுக்கு பதிலாக செயற்கை கால் பொருத்துதல் ஆகிய மருத்துவ சேவைகளை, பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மருத்துவர் ஷியாம் சுந்தர் இலவசமாக செய்துள்ளார்.

    பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இதுபோன்று ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருவதாகவும் மருத்துவர் சியாம் சுந்தர் கூறுகிறார். மேலும், பிரதமரின் பிறந்த நாளான  17-ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாகவும், அதில் 7 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்க உள்ளார்கள் என்றும் கூறினார்.

    பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இதுபோன்று ஏழை எளிய மக்களுக்கு மருத்துவர்கள் இலவசமாக உயர்தரமான சேவைகளை வழங்கி வருவதை நோயாளிகள் வரவேற்று, பிரதமருக்கும் மருத்துவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.



    Also see...முதல் முத்தத்தை தவறாமல் கொடுங்கள் - திருச்சியில் கமல் பேச்சு

    மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் N.P. சத்தியமூர்த்தி, மத்திய அரசு திட்டங்கள் பிரிவு மாநில துணைத் தலைவர் ஆர். லோகேந்திரன், விளையாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் லோகேஸ்வரன், துணைத் தலைவர்கள் துரைசாமி, V.K.T. இராதிகா, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    செய்தியாளர்: ரவிசந்திரன், நாமக்கல்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Doctor, Modi, Modi Birthday, Namakkal

    அடுத்த செய்தி