முகப்பு /செய்தி /நாமக்கல் / பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்லூரி பேராசிரியரை திருமணம் செய்த மாணவன்: பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்லூரி பேராசிரியரை திருமணம் செய்த மாணவன்: பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம்

திருமணம் செய்துகொண்ட காதலர்கள்

திருமணம் செய்துகொண்ட காதலர்கள்

Namakkal college professor marries student | இருவரின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருமணம் செய்து கொண்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

பரமத்திவேலூர்  தனியார் கந்தசாமி கவுண்டர் கலை அறிவியல் சுயநிதி கல்லூரியில் பெண் விரிவுரையாளர் ஒருவர் மாணவனை காதல் திருமணம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு  சேர்ந்த அண்ணாதுரை மகள்   மீனா(28),பரமத்தி வேலூர் தனியார் கந்தசாமி கவுண்டர் கலை அறிவியல் சுயநிதி கல்லூரியில் ஆங்கிலத் துறை விரிவுரையாளராக பணியாற்றி  வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அக்கல்லூரியில் பணியாற்றி வரும் வந்த மீனாவும் அதே கல்லூரியில் படித்து வரும் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நல்லகுமாரன் பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் பிரவீன் (24) என்ற மாணவனுக்கும் காதல் ஏற்பட்டது.

இது குறித்து அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் இருவரையும்  அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்த நிலையிலும் அவர்களது வீட்டிலும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இருவரும் காலை வீட்டிலிருந்து திருவண்ணாமலை சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நேற்று தங்களுக்கு பாதுகாப்பு கோரி வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் பின்பு மாணவன் பிரவீன் பெற்றோர்கள் உடன் கல்லூரி ஆசிரியை மீனாவை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பரமத்திவேலூர் வட்டாரம் மற்றும் கல்லூரி வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal