ராசிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த நாமக்கல் மாவட்ட பாஜக தலைவரின் சித்தியை கொலை செய்து நகை, பணம் மற்றும் சிலிண்டர் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிலிப்பாகுட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி பாவாயி (63), இவர் கணவர் இறந்த நிலையில் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவரின் மகன் மணி (எ) கனகராஜ் 39 என்ற மகன் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது மூதாட்டியின் வீட்டில் எலெக்ட்ரிசியன் பணி நடைபெற்று வரும் நிலையில் அதற்காக வீட்டில் சுற்றுச்சுவரில் துளையிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தலையணை கொண்டு கொலை செய்துவிட்டு, பீரோவில் இருந்த நகை பணம், 2 சிலிண்டர் மற்றும் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் நீண்ட நேரமாக வீட்டிலிருந்து மூதாட்டி வெளியே வராததை கண்டு உறவினர்கள் சென்று பார்த்தபோது மூதாட்டி படுக்கையில் இருந்தபடியே இறந்துள்ளார்.
Also Read: அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலி - சென்னையில் துயர சம்பவம்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் தொடர்பாக ஆயில்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வேலை செய்து வந்த மேஸ்திரி, எலக்ட்ரீசியன் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கொலையாளிகள் குறித்து இதுவரையில் துப்பு கிடைக்காத நிலையில், ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்த மூதாட்டி பாவாயி நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தியின் சித்தி என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Namakkal