ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் தூக்கு மாட்டி தற்கொலை - போலீஸார் தீவிர விசாரணை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் தூக்கு மாட்டி தற்கொலை - போலீஸார் தீவிர விசாரணை

தற்கொலை செய்துக் கொண்ட அர்ச்சகர்

தற்கொலை செய்துக் கொண்ட அர்ச்சகர்

நாமக்கலில் கடன் தொல்லையால் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  நாமக்கலில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழக முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக சனிக்கிழமையில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்வார்கள்.

  பிரசித்தி பெற்ற இந்த கோயில் அர்ச்சகராக இருந்தவர் நாகராஜன் (50). இவரது வீடு அங்குள்ள நரசிங்க சுவாமி கோவில் பகுதியில் உள்ளது.

  இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர் . இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் கோவிலுக்கு செல்லுமாறு மனைவி மற்றும் பிள்ளைகள் அவரிடம் கூறினர். தொடர்ந்து கழிவறைக்கு சென்ற அவர் வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை தட்டினர்.

  அப்போதும் சத்தம் இல்லாததால் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர் .அப்போது அவர் சிறிய டவலில்  தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர், உறவினர்கள் கதறி துடித்தனர்.

  இச்சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். இதனையடுத்து நாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Also see... துபாய்க்கு 'பறக்கும்' 67 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்...

  முதல் கட்ட விசாரணையில் கடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடன் தொல்லையால் நாகராஜன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதும் காரணம் உண்டா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்த சம்பவம் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சர்கள், பக்தர்கள் மத்தியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: ரவிச்சந்திரன் ராஜகோபால், நாமக்கல்

  தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Commit suicide, Crime News, Hindu Temple, Namakkal