ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

2,025 கிலோ உளுந்து.. 600 லிட்டர் நல்லெண்ணெய்.. அனுமனுக்காக நாமக்கல்லில் தயாராகும் 1,00,008 வடை!

2,025 கிலோ உளுந்து.. 600 லிட்டர் நல்லெண்ணெய்.. அனுமனுக்காக நாமக்கல்லில் தயாராகும் 1,00,008 வடை!

வடை தயாரிக்கும் பணி தீவிரம்

வடை தயாரிக்கும் பணி தீவிரம்

Anjaneyar jeyanthi | வரும் 23ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் ,வடைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சார்த்துவதற்காக, ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆண்டுதோறும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வடை மாலை சாத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவதற்காக வடை தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. இதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையிலான 32 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்தடைந்தனர்.

இவர்கள் 7 ஆண்டுகளாக நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை தயாரித்து கொடுக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீரங்கம் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் ஆஞ்சநேயர் ஜெயந்திக்காக ஒரு லட்சத்து 8 வடை தயாரிப்பதற்காக 2,025 கிலோ உளுத்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, சீரகம் 32 கிலோ, 125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. பொருட்களை சுத்தம் செய்து மாவரைத்து வடை செய்யும் பணி இரவு பகல் என 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெறும்.

வரும் 22ம் தேதி காலை 1 லட்சத்து எட்டு வடை தயாரிக்கும் பணிகள் நிறைவு பெறும். பின்னர் கயிற்றில் மாலையாக கோர்க்கும் பணி நடைபெறும். மறுநாள் சுவாமிக்கு வடை மாலை சார்த்தப்படும் என தெரிவித்தார்.

செய்தியாளர்: ரவிக்குமார், நாமக்கல்.

First published:

Tags: Local News, Namakkal