Home /News /namakkal /

மகளின் கள்ளக்காதலுக்கு தடை.. மருமகனை தீர்த்துக்கட்டிய மாமியார் - நாமக்கலில் அரங்கேறிய கொடூரம்

மகளின் கள்ளக்காதலுக்கு தடை.. மருமகனை தீர்த்துக்கட்டிய மாமியார் - நாமக்கலில் அரங்கேறிய கொடூரம்

கொலைசெய்யப்பட்ட நபர்

கொலைசெய்யப்பட்ட நபர்

மகளின் கள்ளகாதலுக்கு தடையாக இருந்த மருமகனை மகளின் கள்ளகாதலுடன் சேர்ந்து மதுபாட்டில் மற்றும் கற்களால் அடித்து கொன்ற மாமியர் உள்ளிட்ட மூன்று பேர் கைது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India
ராசிபுரம் அருகே மகளின் கள்ளகாதலுக்கு தடையாக இருந்த மருமகனை கொலை செய்த மாமியார் மற்றும் கள்ளகாதலனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர், சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்த  டிரைவர் அருள்மணி, (30).  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவரை சில ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நித்ரன் (5) அகிலன் (3)  என்ற இருமகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்னைக் காரணமாக அதே பகுதியில் உள்ள ஜோதிலட்சுமி அடிக்கடி அவரது தனது தாய் ஜானகி  வீட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரித்த அருள்மணி மனைவி ஜோதிலட்சுமிக்கும் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பருக்கும் இடையே கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அருள்மணி அவரது மனைவி ஜோதிலட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும்  மேலும் பிரச்னை பெரிதான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜோதிலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து  அருள்மணி மாமியார் வீட்டிற்குச் சென்று மாமியார் மற்றும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், மகளின் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த அவரது கணவர் அருள்மணியை கொலை செய்ய, மகளின் கள்ளக்காதலன் மணிகண்டனுடன்  சேர்ந்து ஜானகி திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, மது போதையில் இருந்த அருள்மணியை, மணிகண்டன் மற்றும் அவரது நண்பன் லோகேஸ்வரன் (23) ஆகியோர் அருகே உள்ள ஏரிக்குள் கூட்டி சென்று கற்கள் மற்றும் மது பாட்டிலால் தலையில் சரமாரியாக   தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

Also Read: பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபர்..8 வருடம் கழித்துக் கண்டுபிடித்த மனைவி - உண்மை வெளிவந்தது எப்படி?

இதில், சம்பவ இடத்தில் அருள்மணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீஸார் விசாரணை செய்து, மணிகண்டன், லோகேஸ்வரன், ஜானகி ஆகியோரை கைது செய்தனர். மகளின் கள்ளகாதலுக்கு தடையாக இருந்த மருமகனை மாமியாரே கொலை செய்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : சுரேஷ் (நாமக்கல்)
Published by:Arunkumar A
First published:

Tags: Crime News, Murder, Namakkal

அடுத்த செய்தி