முகப்பு /செய்தி /நாமக்கல் / நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

மழை

மழை

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன் கிழமை) 14 மில்லி மீட்டர் மழை பெய்யும், நாளை (15ஆம் தேதி) 6 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

இன்று முதல் 18ஆம் தேதி வரை பகல் நேரம் வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 18 முதல் 20 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கும். வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும்.

காற்று 40 முதல் 90% ஈரப்பதத்துடன் காணப்படும். கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென்கிழக் கில் இருந்து மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோழிப்பண்ணை உரிமையாளர்கள், ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கோழி பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு ரத்த கழிச்சல் மற்றும் குடற்புண் நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. எனவே கோழி தீவனத்தில் கருவாடு, மீன், கோதுமை போன்ற பொருட்களின் உபயோகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

நாட்டு கோழிகளுக்கு குடற்புண் நீக்க மருந்து கொடுக்க வேண்டும். தீவனத்தை பரிசோதனைக்கு பின் பயன்படுத்துவது நல்லது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal, Rain