பேருந்தில் இலவச பயணம் செய்த பெண்.. டிக்கெட் தொலைந்ததால் அபராதம் கேட்டு வற்புறுத்திய செக்கர்.. வைரல் வீடியோ.
பேருந்தில் இலவச பயணம் செய்த பெண்.. டிக்கெட் தொலைந்ததால் அபராதம் கேட்டு வற்புறுத்திய செக்கர்.. வைரல் வீடியோ.
இலவச பேருந்து பயணம்
Ladies Free Bus Ticket : நாமக்கல் அருகே பேருந்தில் இலவச பயணம் மேற்கொண்ட பெண் டிக்கெட்டை தொலைத்ததால், பரிசோதகர் அபராதம் கேட்டு வற்புறுத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது..
அரசு பேருந்தில் மகளிருக்கான இலவச டிக்கெட்டை தொலைத்த பயணியிடம் 100 ரூபாய் அபராதம் கட்ட சொல்லி டிக்கெட் பரிசோதகர் வற்புறுத்திய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பேருந்துகளை நிறுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது பெண் ஒருவர், ‘மகளிருக்கு’ வழங்கப்படும் இலவச பயணச்சீட்டை தான் தொலைத்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டுமென பரிசோதகர் வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் செய்வதறியாது தவித்துள்ளார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் பெண்களுக்கு இலவசம் என பேருந்தை விட்டுவிட்டு டிக்கெட்டை தொலைத்ததற்காக 100 ரூபாய் அபராதம் கேட்பதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.