ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

கொல்லிமலை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை..!

கொல்லிமலை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை..!

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் பொதுமக்களிம் பாதுகாப்பு கருதி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal | Namakkal

  கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்விழ்ச்சி அருவிகளில்  குளிக்க 2 வது நாளாக  தடை விதிக்கப்பட்டுள்ளது.

  நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தளமான கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக உள்ளது.’

  இதையும் படிங்க | ஸ்டாலினுக்கு தமிழ் மேல் என்ன திடீர் கரிசனம்.. தமிழை நாங்க பார்த்துக்கிறோம் நீங்க ஆட்சியை பாருங்க - அண்ணாமலை

  இதன் காரணமாக அருவிகளுக்கு செல்லவோ, அருவிகளில் குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

  செய்தியாளர்: ரவிச்சந்திரன் ராஜகோபால்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Falls, Namakkal