ஆள்பாதி ஆடை பாதி என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அந்த வகையில் ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறப்படுதுண்டு. ஒருவர் அணிந்துள்ள ஆடையை கொண்டு அவரது குணம், ரசனை, பொருளாதார வசதி உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு விடலாம். அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தனித்தனியாக ஆடை கலாச்சாரம் உண்டு. அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டியாகும். ஆனால் இன்றைய இளம் தலை முறையினையிடையே வேட்டி கட்டும் ஆர்வம் குறைந்து வருகிறது.
எனவே தான் உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 6ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது வேட்டிக்கு கிடைத்த அங்கீகாரம் எனலாம். இந்த சூழலில், நாமக்கல் நகரில் உள்ள தலைமை அஞ்சலக அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இன்று அலுவலகத்திற்கு வேட்டி அணிந்து வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அலுவலகம் முன்பு நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும் இன்று வேஷ்டி அணிந்து பணியில் ஈடுபட்டோம். தபால் நிலையத்தில் பணியாற்றும் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று வேட்டி அணிந்து பணியில் ஈடுபட்டனர்” என தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal