Home /News /namakkal /

ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கடந்த ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சி நம்பிக்கையை விதைத்திருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு பொம்மை குட்டைமேடு பகுதிகளில்  நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள்வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

  இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முகப்பு சென்னை ரிப்பன் கட்டிடம் வடிவில் வடிவமைக்கப்பட்டு இருந்ததது. மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. வரவேற்று பேசினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

  'மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி' என்கிற தலைப்பில் ஆ.ராசா எம்.பி., 'தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு' என்கிற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., 'திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம'் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, 'இதுதான் திராவிட இயக்கம'் என்கிற தலைப்பில் சுப.வீரபாண்டியன், 'பெண்களின் கையில் அதிகாரம்' என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசினர்

  'மக்களோடு நில், மக்களோடு வாழ்’ என்கிற தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். இதைத்தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர் பேசினர். இறுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் உரையாற்றியதாவது, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்குப் பின்னால் உங்கள் உழைப்பு இருக்கிறது.

  ஆண்களைவிட பெண்கள் இத்தகைய பொறுப்புக்கு வரும்போது எத்தகைய சிரமங்களை அடைந்திருப்பர் என்பதை நான் அறிவேன். அதே பொறுப்புடன் பணியை கவனிக்க வேண்டும் என்பதற்காக உங்களை அழைத்திருக்கிறோம்.

  உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடி. பெரியார், ராஜாஜி, காமராஜர் ஆகியோர் நகராட்சித் தலைவராக தான் தங்களது பயணத்தை தொடங்கினர். அறிஞர் அண்ணா சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டவர். நான் சென்னை மாநகராட்சியின் மேயர் பொறுப்பில் இருந்தேன். அமைச்சர் மா.சுப்ரமணியன் நகராட்சித் தலைவராக இருந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மக்கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சித் அமைப்புகள் தான். அந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத் தான் மக்களிடம் நேரடியாக பணியை பெற முடியும். கழகத்தை பொறுத்தவரை நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம். தான் மட்டுமே வெற்றி பெற்றால் போதாது என்றில்லாமல் மற்றவர்களை வெற்றி பெறச் செய்தவர் அமைச்சர் கே.என். நேரு.

  அனைத்து வளங்களை கொண்ட மாவட்டம் நாமக்கல் மாவட்டம். இந்தியாவில் தலைசிறந்த லாரி கட்டுமானம் முதல் கோழிப்பண்ணை முதல் தொழில்வளம் பெற்ற மாவட்டம் இது. இத்தகைய சிறப்பு மிகுந்த பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

  நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு பெயர் வைத்தது கருணாநிதி தான். தலைவர் கருணாநிதி படி படி என படிப்பை வலியுறுத்தி வந்தார். மக்கள் பணியாற்ற வேண்டுமென அரசியல் பாதையை தேர்வு செய்தேன். ஒரு கொள்கைக்காக லட்சியத்திற்காக பணியாற்ற வேண்டுமென நினைத்தேன். அப்படி நினைத்த எனக்கு சிறைச்சாலைகள் தான் கிடைத்தது. திருமணமான 5 மாத காலத்தில் மிசா காலத்தில் ஓராண்டு சிறையில் இருந்தேன்.

  கடந்த 1977ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்தேன். மக்கள் பிரதிநிதியாக நான் சட்டப்பேரவையில் நுழைய 12 ஆண்டுகள் ஆகியது. 1989ல் தான் சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக நுழைந்தேன். வாழ்க்கையில் இந்த பொறுப்பை பெறாமல் மறைந்தவர்கள் ஏராளமானோர் உண்டு. அப்படி கிடைக்கும் பொறுப்பை எப்படி தக்க வைத்துக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.

  இந்த சக்தியை மக்களுக்காவே நீங்கள் பயன்படுத்துங்கள். கடந்த ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சி நம்பிக்கையை விதைத்திருக்கிறது. கொரோனா காலத்தில் உதவித்தொகை ரூ. 4 ஆயிரம், 8,000, 24 பேர் நிவாரண பொருள் பெற்றவர்கள். 133 கோடி முறை. 12,21,000 பேர் நகைக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர். 78 லட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பயன்பெற்றுள்ளனர்.

  ஒரு லட்சம் விசாயிகள் இலவச மின்சாரம் பெற்றவர்கள். இப்படி கோடிக்கணககான. இந்த ஓராண்டு காலத்தில் மககளைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், பத்திரிக்கையாளர் நலவாரியம், உங்கள் தொகுதியில்  முதலமைச்சர், அனைத்து சாதியினரும் அர்ச்கர் என எத்தனையே நல்ல பல திட்டங்ள் கடந்த ஓராண்டு காலத்திற்குள். 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.

  உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சட்டப்படி, நியாயப்படி விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனமாக நடந்தால் நான் சர்வாதிகாரியாக நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தின் எதிர்காலம் என்பது திமுக கையில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு கழங்கம் ஏற்படுத்தும் செயலை செய்யக்கூடாது. யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாம் தலைகுனியக்கூடாது.

  உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உங்களுக்கு முதலில்தேவை ஒற்றுமை. அந்த ஒற்றுமை இல்லையெனில் அனைத்துப் பணிகளும் முடங்கிவிடும். விருப்பு, வெறுப்பை ஒதுக்கி வைத்து மக்கள் பணியை உறுதி செய்ய வேண்டும். ஒற்றுமையாக இருங்கள் ஊருக்காக உழையுங்கள்.

  அடிப்படை கருத்தினை கொண்டது தான் திராவிட அரசு. இலக்கை நோக்கி உழையுங்கள். அனைத்து சமூக மக்களையும் கவனிக்க வேண்டும். கொள்கையும், கோட்பாடும் தான் நிரந்திரமானது. நமது இயக்கம் தமிழக விடியலுக்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: CM MK Stalin, DMK, MK Stalin

  அடுத்த செய்தி