ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

கோவில் பூசாரியிடம் ரூ.21,000 லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது...

கோவில் பூசாரியிடம் ரூ.21,000 லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது...

நைனாமலை கோவில் பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது...

நைனாமலை கோவில் பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது...

Namakkal | நைனாமலை கோவிலில் பூசாரியிடம் வாரா வாரம் ரூ.21000 லஞ்சமாக கேட்ட நாமக்கல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரமேஷ் மற்றும் நைனாமலை கோவில் நிர்வாக அதிகாரி லட்சுமி காந்தன் ஆகியோர் கைது. லஞ்ச பணம் 21,000 வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  நாமக்கல் மாவட்டம், முத்துகாப்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் திரளான பக்தர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து பூஜை செய்வது வழக்கம். இந்த கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

  நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலர் இக்கோயிலின் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இக்கோவிலில், புதுக்கோம்பையைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரும் அவரது இரு சகோதரர்களும் பூஜைகளை செய்து வருகின்றனர். பூசாரிகளுக்கு பூஜை செய்யும் முறையை தொடர்ந்து வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் ரமேஷ், நைனாமலை கோயில் செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகியோர் பூசாரிகளிடம் வாரம் ரூ. 21,000 லஞ்சம் பெற்று வந்துள்ளனர்.

  பூசாரி வேலை செய்து வரும் தங்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் கேட்கின்றனர் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம்  அவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசாரின் அறிவுரையின் பேரில், ஏளூரில் உள்ள ஒரு வீட்டில் உதவி கமிஷனர் ரமேஷ், செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகியோரிடம் பூசாரி அண்ணாதுரை ரூ. 21,000ஐ லஞ்சமாக வழங்கினார்.

  Also see... சாலைகளில் மீன்களை விற்பனை செய்ய தடை..

  அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  செய்தியாளர்: ரவிக்குமார், நாமக்கல்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bribe, Hindu Temple, HRNC, Namakkal