இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி ராசாவை உடனடியாக கைது செய்யக்கோரி பரமத்திவேலூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் திமுக எம்.பி ஆ.ராசா பேசிய காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தார், அந்த வீடியோவில் ஆ.ராசா, “இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பினால் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை என்றார். உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது. கிறிஸ்துவராக இல்லையென்றால் , இஸ்லாமியராக இல்லையென்றால் நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. 'இப்படிபட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசியவர், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்று ராசா பேசியிருக்கிறார்.
இது குறித்து, பாஜக தலைவர்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களில் ஆ.ராசா மீது புகார் அளித்தனர்.
இதையும் வாசிக்க: EXCLUSIVE: தென்காசி தீண்டாமை கொடுமை: கைதானவர்களை ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு... முக்கிய சட்டப்பிரிவைப் பயன்படுத்தப் போவதாக தகவல்
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணியினர் ஆ. ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்துக்களை அவதூறாக பேசிய திமுக எம்பி ராசாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் தனது எம்பி பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழிகளை, அவர் மீறி பேசியுள்ளார் எனவும் குற்றம்சாட்டினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: A Raja, Hindu Munnani, Protest