ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழா முன்னேற்பாடு.. ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் தயார்..!

நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழா முன்னேற்பாடு.. ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் தயார்..!

நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர்

Namakkal District News : நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழா முன்னேற்பாடுகள் தீவிரம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி செய்ய 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்தது. நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2 டன் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாத மூல நட்சத்திரம் அமாவாசை தினத்தில், நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமியின் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் நாளை நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி, சுவாமிக்கு 1,00,008 வடைகள் தயார் செய்யும் பணி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் துவங்கி சற்று முன்னர் நிறைவடைந்தது.

நாமக்கல் ஆஞ்சநேயர்

இதன்பின் பட்டாட்சியர்கள் வடைகளை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்து மாலையாக தயார் செய்து நாளை ஆஞ்சநேயருக்கு அணிவிப்பனர். மேலும் ஆஞ்சநேயர் ஜெயந்தி என்றலே நாமக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கும்.

இதையும் படிங்க : பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் வெல்லம்... நாமக்கல்லில் உற்பத்தியாளர்கள் மும்முரம்..

அதேபோல ஆஞ்சநேயர் கோயிலில் பல்வேறு வண்ணங்களில் 2 டன் பூக்களை கொண்டு அலங்கரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பக்தர்கள் வரிசையில் நிற்க தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி, நாளை அதிகாலை 5 மணி முதல் 11 மணி வரை நாமக்கல் ஆஞ்சநேயர் வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

அதன்பின் நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், பஞ்சாமிா்தம், பன்னீர் உள்ளிட்டவற்றாலான அபிஷேகமும், செர்ணாபிஷேகமும் நடைபெற உள்ளன.

மதியம் ஒரு மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது. இவ்விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, வனத்துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் கலந்துகொள்ள உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும், பக்தா்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், மாவட்டம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட போலீசார் கோயிலைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மேலும் நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மோகனூா் சாலை, திருச்சி சாலை, துறையூா் சாலை வழியாக சுவாமி தரிசனம் செய்வதற்காக நான்கு சக்கர வாகனங்களில் வருவோா், உழவா் சந்தை எதிரில் உள்ள சாலையில் பொய்யேரிக்கரை பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

நாமக்கல் ஆஞ்சநேயர்

திருச்செங்கோடு சாலையில் இருந்து வருவோா் நயாரா பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சாலை வழியாகச் சென்று பொய்யேரிக்கரையில் வாகனங்களை நிறுத்தலாம். சேலம் சாலை, சேந்தமங்கலம் சாலையில் வழக்கமான போக்குவரத்து இருக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இருசக்கர வாகனங்களில் வருவோா் நாமக்கல் பூங்கா சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். நாமக்கல் கோட்டை சாலை, பூங்கா சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal