Home /News /namakkal /

நாமக்கல்லில் குழந்தைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு

நாமக்கல்லில் குழந்தைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு

கை பாத வாய்’ நோய்

கை பாத வாய்’ நோய்

Namakkal | HFMD (Hand Mouth Foot disease) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ‘கை பாத வாய்’ நோய் பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை தாக்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதியில் கோமாரி நோய் (Hand, foot, and mouth disease) பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. சில தனியார் பள்ளிகள் எல் கே ஜி / யு கே ஜி வகுப்புகளுக்கு விடுமுறை விட்டுள்ள நிலையில் இதன் பாதிப்புகள் அறியாமல் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த நோய் மற்றவர்களுக்கு வேகமாக பரவி வருகிறது.

    இந்த நோயின் பாதிப்பு தானாகவே கட்டுக்குள் வந்துவிடும் என்றாலும், கோமாரி நோய் பரவுவதைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என குழந்தை நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிகமாக பரவும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு நடவடக்கை எடுக்க வேண்டும்.

    HFMD (Hand Mouth Foot disease) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ‘கை பாத வாய்’ நோய் பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை தாக்குகிறது. HFMD (Hand Mouth Foot disease) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
    இந்த ‘கை பாத வாய்’ நோய் இன்று பல பெற்றோர்களை அச்சுறுத்தி வருகிறது. இதை ஒரு வகை வினோத காய்ச்சல் என்பார்கள்.

    சமீப காலமாக இந்த நோய் அதிக அளவில் தமிழகத்தில் பரவி வருகிறது. ஆக குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானது.
    குழந்தைகளுக்கு இந்த நோய் வராமல் பாதுகாப்பது பெற்றோரின் கடமை. கை வாய் பாதம்’ நோய் (Hand Mouth Foot disease-HFMD in Tamil) என்பது ஒருவிதமான தொற்று நோயாகும்.

    Also see... மாங்காடு அருகே கல்குவாரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

    இந்த வகை தொற்று நோய் பரவுவதற்கு வைரஸ் கிருமிகள் தான் காரணம். காக்ஸ்சாக்கி மற்றும் என்டெரோ என்னும் இரண்டு வகை வைரஸ்களால் இந்தக் ‘கை வாய் பாத’ நோய் பரவுகிறது. இந்த காக்ஸ்சாக்கி என்னும் வைரஸில் மட்டுமே மொத்தம் 23 வகைகள் உள்ளன. அதில் சமீபகாலமாக டைப் 16 அதிக அளவு பரவி வருகிறது. இந்த வைரஸ் மழைக்காலங்களில் தான் அதிக அளவு பரவி குழந்தைகளைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

    செய்தியாளர்: சுரேஷ், ராசிபுரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Disease, Namakkal

    அடுத்த செய்தி