ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

“பள்ளிக்கே போகலை.. ஆனா 8வது பாஸ்”.. அதிர்ச்சிக் கொடுத்த கூட்டுறவு சங்க ஊழியர்!

“பள்ளிக்கே போகலை.. ஆனா 8வது பாஸ்”.. அதிர்ச்சிக் கொடுத்த கூட்டுறவு சங்க ஊழியர்!

கைதானவர்

கைதானவர்

Namakkal District News : போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த கூட்டுறவு சங்க ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம், மோகனுார் ஒன்றியம், ஆரியூரில்,  தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அலுவலக உதவியாளராக 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இவர் பணியில் சேரும்போது 8ம் வகுப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவர் பணியில் சேர்ந்தபோது, போலியான கல்வி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில், அவரது கல்வி சான்றிதழ்களை சரி பார்க்கும் பணியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : செல்ஃபி மோகம்.. 150 அடி பள்ளத்தில் விழுந்த வருங்கால மனைவி.. சினிமா பாணியில் காப்பாற்றிய மாப்பிள்ளை

விசாரணையில், அவர் பள்ளிக்கே செல்லவில்லை எனவும்,  8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக கல்வி சான்றிதழ் அளித்தது போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன், அலுவலக உதவியாளர் ஜெயராமனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார்.

செய்தியாளர்  : ரவிச்சந்திரன் ராஜகோபால் - நாமக்கல்

First published:

Tags: Crime News, Local News, Namakkal