Home /News /namakkal /

ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விநோத திருவிழா… நள்ளிரவு 12 மணிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து பூஜை

ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விநோத திருவிழா… நள்ளிரவு 12 மணிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து பூஜை

ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் திருவிழா

ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் திருவிழா

Namakkal district News : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 200 ஆண்டுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோத திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நிலையில், விழாவால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

மேலும் படிக்கவும் ...
  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் வடுகம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் இக்கோயிலில் ஆடி 18-ஐ ஒட்டி கிடா வெட்டி சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பது சிறப்பு.

  இந்த ஆண்டு பொங்களாயி அம்மன் கோயில் விழா கடந்த வாரம் தொடங்கியது. கோயிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடந்துவந்தன. இந்நிலையில் இரவு 12 மணிக்கு பெங்களாயி அம்மன்கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன், இண்டங்காட்டு கருப்பசாமி ஆகியவைகளுக்கு ஆட்டு கிடா வெட்டி பொங்கல் வைத்து பூஜை நடந்தது.

  இதில், புதுப்பட்டி, ராசிபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.  முதலில் மலை சாதி சமூகத்தை சேர்ந்த பூசாரிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் முதன் முதலாக பெண் ஆடு பலியிடப்பட்டது.

  அதன்பிறகு கோவில் முன்பு ஆடுகளை வெட்டி பலியிட்டனர். அடுத்து, ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது. இவ்விழாவில் 300க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. பலியிட்ட ஆடுகளை அதிகாலை வரை சமைத்து அங்கு வந்திருந்த சுமார் 15000க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பரிமாறப்பட்டது.

  வீட்டுக்கு எந்த பொருளும் எடுத்துச்செல்லக் கூடாது

  இது குறித்து விழாக்குழுவினர் கூறியதாவது, மலையாள பெண் தெய்வங்களுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு செய்யப்படும் இத்திருவிழாவில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் ஆடுகளை பலியிட்டு வழிபடுவார்கள்.

  இதன் மூலம் நோய்நொடி நீங்குவதுடன், விவசாயம் செழிக்கும். குடும்ப பிரச்னைகள் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை காலந்தொட்டு இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக இந்தவிழாவை நாங்கள் நடத்தி வருகிறோம் என்றனர். இந்த கோவிலில் இருந்து வீட்டுக்கு எந்த பொருள்கள், உணவுகள் எடுத்துச்செல்லக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

  பொதுவாக இந்த கிராமத்தில் உள்ள சாமிகளுக்கு எப்போதும் ஆட்டு கிடாக்களை மட்டுமே பலியிடுவார்கள். ஆனால், பொங்களாயி அம்மன் கோயிலில் முதலில் பெண் ஆட்டை மட்டுமே பலியிடுகின்றனர். இங்கு சமைக்கும் சாதம், கறி உள்ளிட்டவைகளை மீதியானாலும் வீட்டுக்கு எடுத்துச்செல்லமாட்டாரகள். அங்கே வெட்டப்படும் ஆட்டுத் தோலை கோயில் நிர்வாகம் சார்பில்தான் ஏலம் விடுவார்கள்.

  சமபந்தி விருந்து:

  பொங்களாயி அம்மன் கோயில் விருந்தில் அனைத்து சமுதாய மக்களும் சாதி, வித்தியாசமின்றி ஒன்றாக அமர்ந்து கறி விருந்து சாப்பிடுகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. விருந்தினரை முதலில் சாப்பிட சொல்லிவிட்டுதான் உள்ளூர்காரர்கள் சாப்பிடுகின்றனர். வாழைஇலையை விருந்தினர்களே கொண்டு வந்துவிடுகின்றனர்.

  ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருவிழா


  ஆண்கள் மட்டும் வழிபடுவது ஏன்?

  போத மலைப்பகுதியில் 250 ஆண்டுகளுக்கு முன்பு பொங்களாயி என்ற பெண் வாழ்ந்து வந்தார். அவர், கர்ப்பிணியாக இருக்கும்போது, பிரசவத்திற்காக கீழே இறங்கி வந்ததாகவும், பெண்கள் யாரும் உதவி செய்யாததால் இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இதனால், மனமொடிந்த பொங்களாயி இப்பகுதி மக்களுக்கு சாபம் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பஞ்சம், பட்டினி ஏற்பட்டதாகவும், அதன் பிறகு இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டும் ஒன்று கூடி, தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த ஆண்கள் மட்டும் விழா எடுப்பதாவும், பெண்கள் இல்லாமல் இந்த விழா நடத்தப்படும் எனவும் இந்த விழாவை ஏற்க வேண்டும் என தெய்வத்தை கேட்டுக்கொண்டதாகவும் வாய்வழிக்கதை சொல்லப்பட்டு வருகிறது. அதன் பிறகு மழை பெய்யத்தொடங்கியது என்றும் சொல்லப்படுகிறது.

  Must Read : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு ஆழ்கடலில் பேனர் வைத்த ஆதரவாளர்கள்

  அதனைத் தொடர்ந்து கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் பெண்கள் பயன்படுத்தும் பொருளை பயன்படுத்த மாட்டார்கள். மற்றும்  கோவில் பொருட்களை பெண்கள் தொடவும் மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் பெண்கள் இந்தப் பகுதிகுள் நுழைவதே இல்லை என்றும் சொல்லப்படுகிறது

  செய்தியாளர் - சுரேஷ்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Festival, Men, Namakkal, Temple

  அடுத்த செய்தி