Home /News /namakkal /

அதிக விளைச்சலால் தேங்காய் நார் உற்பத்தி அதிகரிப்பு.. வேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை

அதிக விளைச்சலால் தேங்காய் நார் உற்பத்தி அதிகரிப்பு.. வேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை

தேங்காய் நார்

தேங்காய் நார்

Namakkal | கடந்த ஆண்டைவிட தேங்காய் உற்பத்தி அதிகம் என்பதால், தேங்காய் நாரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அதற்கு எளிய முறையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார், மோகனுார் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. காவிரிப் பாசனத்தை நம்பி மேற்குறிப்பிட்ட இடங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், கரும்பு, வாழை மற்றும் வெற்றிலை உள்ளிட்டவை பிரதான பயிர்களாகும். இதற்கு அடுத்தபடியாக தென்னை விவசாயிகள் இந்த பகுதிகளில் அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்த படியாக தமிழகத்தில் ஈரோடு, பொள்ளாச்சி, தஞ்சாவூர் நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளிமாநிலங்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால் தினந்தோறும் 10லிருந்து 15 லாரிகளில் தேங்காய் அனுப்பப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டைவிட தேங்காய் விலை குறைந்து இருப்பதால்  சில்லரை விற்பனை 10 லிருந்து 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தமிழகத்தை பொருத்த அளவில் தேங்காய் உற்பத்தி அதிகம். இந்த ஆண்டு காப்பு குறைந்ததாலும் தேங்காய் சார்ந்த பொருட்களின் சந்தை விலை குறைவு காரணமாக தேங்காய் விலை குறைந்துள்ளது.

    மேலும் தேங்காய் நார் வெளிநாடுகளுக்கு செல்வது குறைந்துள்ளதால் தேங்காய் தொழிலில் உரிய விலை கிடைப்பதில்லை. எனவே, தேங்காய் நாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்தல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எளியமுறையை கொண்டு வருதல் ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என  தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Also see...கணவரால் பிரச்சனை ஏற்பட்டால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றலாம்.. விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

    மேலும்  தேங்காய் நாரின் விலை ஒரு லோடு ரூ 21000 லிருந்து 7000 ரூபாய்க்கு சரிந்து உள்ளது. எனவே மத்திய அரசு தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேங்காய் நாரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எளிய முறை செய்தால் தென்னை விவசாயிகள், வியாபாரிகள் பயன் பெறுவோம் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: ரவிச்சந்திரன், நாமக்கல்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Central government, Coconut, Farmers, Namakkal

    அடுத்த செய்தி