ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

2 ஆண்டுகளாக இயங்கிய போலி வங்கி - 450 விவசாயிகளிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி!

2 ஆண்டுகளாக இயங்கிய போலி வங்கி - 450 விவசாயிகளிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி!

போலி வங்கி

போலி வங்கி

Namakkal District News : தனியார் வங்கியின் ஏடிஎம் அட்டையை தங்களது வங்கி சார்ந்த ஏடிஎம் அட்டை போல் போலியாக தயாரித்து வழங்கி உள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  ரிசர்வ் வங்கியின் உரிய அங்கீகாரமின்றி, நாமக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்ட போலி வங்கியில் வாடிக்கையாளர்களாக இணைந்த 450-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து ரூ.15 லட்சம் வரையில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

  ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில், ரிசர்வ் வங்கியிடம் எவ்வித அனுமதி, அங்கீகாரமும் பெறாமல், சென்னை, மதுரை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, விருத்தாச்சலம் உள்பட 9 இடங்களில் சென்னை அம்பத்துரை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் தலைமையிலான சிலர் கிளைகளை நிறுவி வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர்.

  மேலும், அவர்களிடம் வங்கி கணக்கு தொடங்குவதற்காக ரூ.750 வீதம் வசுலித்துள்ளனர். அந்த வங்கி கணக்கில் பலர் ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வீதம் செலுத்தி வந்தனர். அவர்களுக்கு தனியார் வங்கியின் ஏடிஎம் அட்டையை தங்களது வங்கி சார்ந்த ஏடிஎம் அட்டை போல் போலியாக தயாரித்து வழங்கி உள்ளனர்.

  இதையும் படிங்க : 60 வயது மூதாட்டியை சோளக்காட்டில் வைத்து பலாத்கார முயற்சி : அலறல் சத்தத்தால் சிக்கிய 22 வயது வாலிபர்! 

  சில மாதங்களுக்கு முன் அந்த வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் வரை பணம் செலுத்திய மதுரை, நாமக்கல்லை சேர்ந்த பெண்கள் இருவர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்துக்கு புகார் மனு அனுப்பினர்.

  அங்குள்ள அதிகாரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க, மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி போலி வங்கியை நடத்துவதற்கு தலைமையாக செயல்பட்ட சந்திரபோஸை வியாழக்கிழமை கைது ெசய்துள்ளனர்.

  நாமக்கல் - மோகனுர் சாலையில், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் செயல்பட்ட இந்த வங்கியில் 3 பெண்களும், ஒரு ஆணும் அண்மையில் பணியாற்றி வந்தனர். சென்னையில் இருந்து வந்த மத்திய குற்றப்புலனாய்வு போலீஸார் சவ்வாய்க்கிழமை வங்கியில் இருந்து சுமார் 83 வங்கி கணக்கு புத்தகங்களையும், கணினி சார்ந்த ஆவணங்கள், வாடிக்கையாளர் ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். தற்போது அந்த வங்கி அலுவலகம் மூடப்பட்டு கிடக்கிறது.

  மதுரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ.16 லட்சம் வரையில் ஏமாற்றி உள்ளதாக தெரிகிறது. நாமக்கல்லில் தொடக்கத்தில் குளக்கரை தெருவிலும், அதன்பின் ஜோதி திரையரங்கம் அருகிலும் செயல்பட்ட வங்கி 15 நாள்களுக்கு முன்பு தான் மோகனுர் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : மாமனுக்கு தெரியாமல் 615 கிலோ வெள்ளிக்கட்டிகளை திருடிய மைத்துனர்

  தனியார் வங்கி ஏடிஎம் அட்டையில் இவர்களுடைய வங்கி ஒட்டுவில்லையை ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளனர். போலியாக வங்கி கணக்குப் புத்தகத்தையும் கொடுத்துள்ளனர்.

  நாமக்கல்லில் மட்டும் சுமார் ரூ.15 லட்சம் வரையில் விவசாயிகள், பொதுமக்களிடம் அவர்கள் ஏமாற்றியிருக்க வாய்ப்பு உள்ளது. போலீசார் பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர் : ரவிக்குமார் - நாமக்கல் 

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Namakkal