ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

தீபாவளி பண்டிகைக்கு பிறகு முட்டை விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகைக்கு பிறகு முட்டை விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு

Egg Rate | தொடர் மழை காரணமாக முட்டைகளை விரும்பி சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  நாமக்கல்லில் தேசிய  முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ.5.20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  விலை உயர காரணங்கள் மற்ற மண்டலங்களில் விலை உயர்வு, தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை ஆகையால் மற்ற மண்டலங்களுக்கு செல்லும் முட்டை தேவை அதிகமானது.

  மழைக்காலம் என்பதாலும், குளிர்காலம் தொடங்குவதாலும் அதிகளவில் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உற்பத்தி குறைவால் கேரளா மற்றும்  வட மாநிலங்களுக்கு செல்லும் முட்டை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  தொடர் மழை காரணமாக முட்டைகளை விரும்பி சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஏற்றுமதி உயர்ந்து இருந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு சில பண்ணையாளர்கள் மட்டுமே முட்டைகளை உற்பத்தி செய்கின்றனர்.

  இதையும் படிங்க : சேலத்தில் கேக் மிக்சிங் திருவிழா.. 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்..!

  இந்த காரணங்களை மேற்கோள் காட்டி பண்ணையாளர்கள் மத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த 5 பைசா விலை உயர்வை நிர்ணயித்துள்ளது.

  இதேபோன்று கறிக்கோழி விலை ரூ.106க்கும், முட்டை கோழி விலை ரூ.95க்கும் விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  செய்தியாளர் : ரவிச்சந்திரன் ராஜகோபால்

  Published by:Karthi K
  First published:

  Tags: Namakkal