நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகளுக்குமேல் உள்ளன தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதே போல கறிகோழிகளும் தமிழகம் மட்டுமல்லாது பிற பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி கறி கோழி உற்பத்தியும், கோழிமுட்டை வியாபாரமும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
குறிப்பாக நாமக்கல் முட்டைகள் சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், கத்தார் நாட்டில் உலக கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்கு அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியான நிலையில் கடந்த மாதம் 3 மடங்கு அதிகரித்து 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?
இந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்து 2.2 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது என்து குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Egg, FIFA World Cup 2022, Local News, Namakkal