ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

நண்பனை காப்பாத்துங்க.. சாலையில் அடிபட்ட நாய்க்காக ஒன்றுகூடிய தெரு நாய்கள்..!

நண்பனை காப்பாத்துங்க.. சாலையில் அடிபட்ட நாய்க்காக ஒன்றுகூடிய தெரு நாய்கள்..!

நண்பனை காப்பாற்ற போராடிய நாய்கள்

நண்பனை காப்பாற்ற போராடிய நாய்கள்

நாமக்கலில் காப்பாற்றக்கோரி குரைத்து கதறிய சக நாய்களின் வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  நாமக்கலில் வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை காப்பாற்றுமாறு, பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சாலையில் சென்றோரை குரைத்தபடி  மக்களை அழைத்த நிகழ்வினை பார்த்தோர் செய்வதறியாது வேதனையில் கண்கலங்கினர்.

  நாமக்கல்-சேலம் சாலை வாகனப் போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதி. இங்கு பேருந்து, லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் என நொடிக்கு நூறு எண்ணிக்கையில் அங்கும், இங்குமாக பறந்தபடி இருக்கும். இந்த நிலையில் நேற்று  காலை சாலையை கடக்க முயன்ற நாய் முகத்தின் மீது காரின் முன்பகுதி மோதியது. ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது.

  இந்நிலையில், சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது நண்பனை கண்டு அவ்வழியாக சென்ற பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் அதனருகில் வந்து குரைத்தபடியும், கால்களால் அதனை தட்டியெழுப்பியவாறும் குரைத்தபடி நின்றுக் கொண்டிருந்தன.

  Also see...இவ்வளவு வெயிட்டா? வலையை சுத்தம் செய்த மீனவர்.. சிக்கிய வெடிப்பொருள்

  யாராவது உதவிக்கு வரமாட்டீர்களா ? என் நண்பனை காப்பாற்றமாட்டீர்களா? என்று சாலையில் செல்வோரை பார்த்தபடியும் இருந்த காட்சி அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dog, Love, Namakkal