Home /News /namakkal /

உரிமையாளர் இல்லாமல் தானே ஆட்டை மேய்க்கும் நாய்..

உரிமையாளர் இல்லாமல் தானே ஆட்டை மேய்க்கும் நாய்..

வெள்ள நாயும் கருப்பு ஆடும்

வெள்ள நாயும் கருப்பு ஆடும்

Rasipuram | ராசிபுரம் அருகே ஆட்டை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் நாயின் வினோத செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது |

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rasipuram, India
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஒரு விவசாயி. தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வரும் இவர் நாட்டு இன நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார்.

    காலை மற்றும் மாலை வேளையில் ஆட்டை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் கோவிந்தனுடன் அவரது நாயும் சென்று வருவது வழக்கம். அதனால் அவருடைய நாட்டு நாயான வெள்ளை நாயும் கறுப்பு ஆடும் மிகவும் பாசமாக ஒன்றாக சுற்றி திரிந்தது...

    பல நாட்கள் கோவிந்தனுடன் செல்லும் அந்த நாய் கோவிந்தன் ஆடுகளை எவ்வாறு மேய்ப்பாரோ அதேபோல் எவ்விதப் பயிற்சியும் இல்லாமல் தற்போது தன்னந்தனியாக ஆட்டை கயிறு மூலமாக வாயில் கவ்வி மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீடு திரும்பியது.  இந்த வினோத சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆட்டை மேய்ச்சலில் இருந்து வீட்டுற்கு அழைத்து வந்த நாய்


    Also see... தமிழகத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை...

    பழக்கப்படுத்திய ஒரு நாய் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது வெளிநாடுகளில் மிக சாதாரணமாக நடப்பது ஒன்று. ஆனால், எவ்வித பயிற்சியும் இல்லாமல், தனது எஜமான் செய்வது போல ஆட்டை மேய்க்கும் இந்த சம்பவம் அந்த கிராமத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dog Care, Goat Liver, Namakkal, Rasipuram

    அடுத்த செய்தி