Home /News /namakkal /

சமத்துவபுரம் வீடுகள் சீரமைப்பு பணிகளில் ஊழல்... பயனாளிகள் குற்றச்சாட்டு

சமத்துவபுரம் வீடுகள் சீரமைப்பு பணிகளில் ஊழல்... பயனாளிகள் குற்றச்சாட்டு

சமத்துவபுரம் வீடுகள் சீரமைப்பு

சமத்துவபுரம் வீடுகள் சீரமைப்பு

சமத்துவபுரம் வீடுகள் சீரமைப்பு பணிகளில் தமிழக முதல்வர் ஒதுக்கிய 50,000 தொகை போதாது - பயனாளிகள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ராசிபுரம் அருகே 1999 ஆம் ஆண்டு   கருணாநிதியால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 100 வீடுகளுக்கு தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால்  சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ஊழல் நடப்பதாக பயனாளிகள்  வேதனை தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அத்தனூர்  பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டு 100 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த வீடுகள் பழுதாகிவிட்டதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான நிதியை தமிழக முதல்வர் வழங்கி உத்தரவிட்டார்.

    மொத்தமுள்ள 100 வீடுகளில் 59 வீடுகளுக்கு வெள்ளையடித்து வர்ணம் பூசுதல் பணிகள் மேற்கொள்ளவும் 40 வீடுகளுக்கு சிறு பழுதுகள் சரி செய்து வெள்ளை அடித்து வர்ணம் பூசம் பணிகள் மேற்கொள்ளவும் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் மதிப்பீட்டு பணிகள் செய்ய உத்தரவு வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    வர்ணம் பூசப்பட்ட சமத்துவபுர வீடு


    இந்தப் பணிகளை 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ஒரு சில வீடுகள் தவிர மற்ற வீடுகளுக்கு ஒப்பந்ததாரர்கள் எந்த பணியும் செய்யாமல் மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    இடிந்த நிலையில் உள்ள மேற்கூரை


    அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் ஒப்பந்ததாரர்கள் சிறு சிறு வேலைகளை செய்து விட்டு ஒதுக்கப்பட்ட தொகையில் ஊழல் செய்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

    பழுதான நிலையில் உள்ள மேற்கூரை


    இது குறித்து பயனாளிகள் கூறுகையில், இந்த பணிகள் செய்வதற்கு தமிழக முதல்வர் ஒதுக்கிய தலா ஐம்பதாயிரம் ரூபாய் தொகை போதாது எனவும்,பராமரிப்பு பணிகள் செய்வதற்கு கூடுதல் பணம் செலவாகும் என்பதால் அங்கு குடியிருக்கும் பயனாளிகளிடம் கூடுதல் தொகை கேட்டு வற்புறுத்தி வருவதாகவும், 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய பணிகளை இரண்டு மாத காலமாகியும் எந்த பணிகளும் செய்யாமல் ஒப்பந்ததாரர்கள் மெத்தனம் காட்டுவதாகவும் தெரிவித்தனர்.

    சேதமான நிலையில் உள்ள மேற்கூரை


    மேலும் தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ள இந்த தொகையை தங்களிடமே கொடுத்தால் தங்களுக்கு தேவையான பணிகளை பயனாளிகளே செய்து கொள்வதாகவும்,  அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படாத ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் : சுரேஷ்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: CM MK Stalin, Rasipuram

    அடுத்த செய்தி