Home /News /namakkal /

விநியோகஸ்தர்களிடம் பெற்ற பொருட்களுக்கான பணத்தை வழங்காமல் மோசடி... தனியார் சூப்பர் மார்க்கெட் மீது புகார்...

விநியோகஸ்தர்களிடம் பெற்ற பொருட்களுக்கான பணத்தை வழங்காமல் மோசடி... தனியார் சூப்பர் மார்க்கெட் மீது புகார்...

சுப்பர் மார்கெட்

சுப்பர் மார்கெட்

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் பெற்றதற்கான பணத்தை வினியோகஸ்தர்களுக்கு வழங்காமல் மோசடி செய்த தனியார் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் தலை மறைவாகியுள்ளார்.

    மோசடியில் ஈடுபபட்ட தனியார் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் இருந்து பொருள் விநியோகம் செய்ததற்கான தொகையை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளும்படி நாமக்கல் மாவட்ட விநியோகஸ்தர்கள் நலச்சங்கத்தினர், நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.  

    அப்போது அவர்கள் கூறியதாவது, “நாமக்கல் பரமத்தி சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. அதன் உரிமையாளர் அறிமுகமானவர் என்பதால் நாமக்கல் மாவட்ட வினியோகிஸ்தர்கள் நலச்சங்கம் மூலம் பல்வேறு பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. வழக்கமாக கடனுக்கு பொருட்கள் வினியோகிக்கப்படும். ஒரு வார காலத்தில் அவற்றுக்கான பணம் பெறப்படும்.

    எனினும், கடந்த 3 மாதங்களாக பொருட்கள் வழங்கியததற்கான எந்த தொகையையும் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தினர் வழங்கவில்லை. ஏறத்தாழ ரூ. 27 லட்சம் தொகை வழங்க வேண்டும். இத்தொகை நாமக்கல் வினியோகத்தர்களுக்கு மட்டும் வழங்க வேண்டியது. பிற மாவட்டங்களிலும் இருந்தும் அவர்கள் பொருள்கள் கொள்முதல் செய்துள்ளனர். நிலுவைத்தொகையை கேட்ட சங்க உறுப்பினர்களை மிரட்டுகிறார்கள்.

    Also see... திருப்பூரில் பேருந்துக்குள் மழை... பயணிகள் அவதி...

    இச்சூழலில் கடந்த சில தினங்களாக சூப்பர் மார்க்கெட்டும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டாலும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. எனவே பொருள் வினியோகம் செய்ததற்கான தொகையை பெற்றுத்தரக்கோரி மனு அளித்துள்ளோம்” என்றனர்.

    செய்தியாளர்: ரவிக்குமார், நாமக்கல்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Namakkal

    அடுத்த செய்தி