ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

ராசிபுரம் அருகே நாய்களிடம் இருந்து புள்ளி மானை மீட்ட பொதுமக்கள்..

ராசிபுரம் அருகே நாய்களிடம் இருந்து புள்ளி மானை மீட்ட பொதுமக்கள்..

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal District News : ராசிபுரம் அருகே நாய்களிடம் இருந்து புள்ளிமானை உயிருடன் மீட்டு கிராம மக்கள் முதலுதவி அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலை குன்றுகளில் அதிக அளவு புள்ளிமான் உள்ளது. மலையிலிருந்து மான்கள் இரை மற்றும் நீரை தேடி அவ்வப்போது கிராமப் பகுதிகளுக்குள் வருவது வழக்கம்.

இந்நிலையில், பட்டணம் அடுத்த காட்டுக்கொட்டாய் அருகே புள்ளிமான் ஒன்று நேற்று இரவு நேரத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்தது.

நீண்ட நேரமாக நாய்கள் சத்தம் அறிவதை கண்ட அப்பகுதியினர் புள்ளிமான் ஒன்று நாய்களிடம் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி அடித்து மானை உயிருடன் மீட்டனர்.

இதையும் படிங்க : 2,025 கிலோ உளுந்து.. 600 லிட்டர் நல்லெண்ணெய்.. அனுமனுக்காக நாமக்கல்லில் தயாராகும் 1,00,008 வடை!

பின்னர், சிறு காயங்கள் அடைந்த புள்ளிமானுக்கு முதலுதவி அளித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் விரைந்து வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இரவு நேரத்தில் நாய்களிடமிருந்து புள்ளிமானை உயிருடன் மீட்ட கிராம மக்களின் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் செய்தியாளர் - பிரதாப்

First published:

Tags: Local News, Namakkal