ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

கிறிஸ்துமஸ் பண்டிகை : நாமக்கல் தூய கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

கிறிஸ்துமஸ் பண்டிகை : நாமக்கல் தூய கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

கிறிஸ்துமஸ் சிறப்பு வுழிபாடு

கிறிஸ்துமஸ் சிறப்பு வுழிபாடு

Namakkal Christmas Celebration : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் தூய கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நள்ளிரவு முதல் தேவாலயங்கள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கேக் வெட்டியும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நாமக்கல்லில் அமைந்துள்ள தூய கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடைபெற்றது. இதில் பங்கு தந்தை செல்வம் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.

இதில் ஏசு கிறிஸ்து பிறந்த வரலாறு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ஆலயத்தில் ஏசு கிறிஸ்து பிறந்ததை வெளிக்கொணரும் வகையில் சிறிய சிறிய குடில்கள் அமைத்து அதில் சூசையப்பரும், கன்னி மரியாளும் குழந்தை இயேசுவை கையில் ஏந்தி வந்து ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கையில் வழங்கினார்.

இதையும் படிங்க : அடேங்கப்பா..! ஒரே கல்லில் 108 ஆஞ்சநேயர் சிற்பங்களா..! ராசிபுரத்திலிருந்து தகுதியான கருங்கல்...!

அதைப் பெற்றுக் கொண்ட அவர் புனிதம் செய்து ஏசு கிறிஸ்துவரை அறிமுகம் செய்தார். அப்போது தேவாலயத்தில் மணிகள் ஒலிக்கப்பட்டன என்பது போன்ற சொரூபங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்ததை ஆர்வத்துடன் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முன்னதாக உலகம் மக்கள் நன்மை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. இதன்பின் கிறிஸ்துவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் ஸ்டார் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

செய்தியாளர் : பிரதாப் - நாமக்கல் 

First published:

Tags: Local News, Namakkal