Home /News /namakkal /

ப்ளஸ் 2 மாணவிக்கு பிறந்த குழந்தை.. தலைமறைவான 19 வயது இளைஞரை தேடும் போலீஸ் - ராசிபுரத்தில் பரபரப்பு

ப்ளஸ் 2 மாணவிக்கு பிறந்த குழந்தை.. தலைமறைவான 19 வயது இளைஞரை தேடும் போலீஸ் - ராசிபுரத்தில் பரபரப்பு

பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை

பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை

Namakkal District | மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மாணவன் தலைமறைவான சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேசுபொருளாகி உள்ளது.

    ராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த  18 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கொல்லிமலை குண்டணி கீரைக்காடு அடுத்த ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரின் மகன் அஜித். அதே பள்ளியில் +2  படித்து முடித்துவிட்டார்.

    இந்நிலையில் மாணவிக்கு காதல் ஆசைக்காட்டிய அஜித் அவருடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளதாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதில், மாணவி கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் முள்ளுக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் 18 வயதுடைய மாணவிக்கு அழகான பெண் குழந்தை நேற்று பிறந்தது. இதனை அறிந்த அஜித் கொல்லிமலை பகுதியில் தலைமறைவாகிவிட்டார்.

    இச்சம்பவம் குறித்து இராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் மற்றும் மாவட்ட குழந்தை நல அலுவலர் புகார் கொடுத்தனர். தலைமறைவான அஜீத்தை தீவிரமாக தேடும் பணியில்  போலீசார் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் முள்ளுக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ALSO READ |  சித்திரை சுழியில் ரூ.300 கோடி மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம்.. தீர்வு கேட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கும் திருச்சி விவசாயிகள்

    இதேபோல் இராசிபுரம் பட்டணம் பேரூராட்சியை சேர்ந்த 17வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 6 மாதம் கர்ப்பம் என கூறப்பட்ட நிலையில் வீட்டின் அருகே குடியிருக்கும் சுகில் என்பவன் காதலிப்பதாக கூறி உல்லாசம் அனுபவித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கருவை கலைக்க சிறுமியின் தாய் தனியார் மருத்துவமனையில் மருந்துகள் வாங்கி சாப்பிட்டதால் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு இராசிபுரம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கபட்டார். சற்று நேரத்திலேயே கருசிதைவு ஏற்பட்டது. இராசிபுரம் காவல் துறைக்கு மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது போக்சோ வழக்கு பதிந்து தலைமறைவான  நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Namakkal, Sexual abuse

    அடுத்த செய்தி