ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

மதுபோதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டிய டிரைவர்.. நடந்தே போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்ற பயணிகள்

மதுபோதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டிய டிரைவர்.. நடந்தே போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்ற பயணிகள்

பஸ் டிரைவர்

பஸ் டிரைவர்

Rasipuram | ராசிபுரத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் மணிகண்டன் மது போதையில் பேருந்தை இயக்கியதால் ஓட்டுனரை பிடித்து,பேருந்து பயணிகள் ராசிபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Rasipuram, India

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை ஓட்டுநர் மணிகண்டன் இயக்கி உள்ளார். அப்போது சாலையில் அதிவேகமாகவும் பொதுமக்கள் மீது மோதுவதும் போல் பேருந்தை தாறுமாறாக இயக்கி உள்ளார்.

  இதனை கண்ட பேருந்தில் பயணித்த பயணிகள் ஓட்டுனர் மணிகண்டன் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பழைய பேருந்து நிலையம் அருகே வண்டியை  நிறுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். பின்னர் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மதுபோதையில் இருந்த ஓட்டுநர் மணிகண்டனை சேலம் சாலையிலிருந்து இறக்கி காவல் நிலையத்திற்கு நடந்தே அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகளை பாதுகாப்பாக மாற்று பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டது. மேலும் ஓட்டுநர் மணிகண்டன் மீது ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also see...போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு கண்டக்டரிடம் போதை இளைஞர் ரகளை.. வீடியோ

  அரசு பேருந்து ஓட்டுநர்கள் மது போதையில் பேருந்து இயக்கினால் பணி நீக்கம் செய்வது போல் தனியார் பேருந்து ஓட்டுனர்களையும் மிக கடுமையாக தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bus, Driver suspended, Rasipuram