ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் பூக்களால் அபிஷேகம்...

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் பூக்களால் அபிஷேகம்...

நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர்

Namakkal Anjaneyar Temple : ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் பூக்களை கொண்டு அபிஷேகம் நடந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.‌

அந்த வகையில், நாமக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் உள்ளது. ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய தினசரி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில், இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுமார் 500 லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் தயிர், திருமஞ்சனம், சந்தனம் மற்றும் வாசனை திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

இதையும் படிங்க : நாமக்கல் பட்டாசு விபத்து... உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

இதனைத்தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சுமார் 2 டன் வண்ண வண்ண பூக்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஏராளமான சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முன்னதாக நள்ளிரவு 12 மணி முதல் ஏராளமான பக்தர்கள் நாமக்கல் மைந்தனை தரிசனம் செய்ய வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : பிரதாப் - நாமக்கல்

First published:

Tags: Hindu Temple, Local News, Namakkal