ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

வரதட்சணை கேட்டு டார்ச்சர்... திருமணமான ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் இன்ஜினியர்!

வரதட்சணை கேட்டு டார்ச்சர்... திருமணமான ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் இன்ஜினியர்!

நாமக்கல் உயிரிழப்பு

நாமக்கல் உயிரிழப்பு

திருமணமான ஒரு வாரத்தில் இருந்து வரதட்சணை கொடுமை ஆரம்பித்ததால் இளம்பெண் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல் அருகே திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆதியப்பன், லாரி ஓட்டுநரான இவரது 23 வயது மகள் இன்ஜினியரிங்  படித்து உள்ளார்.

இவரது மகளுக்கும், நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிகல் என்ஜினியரான வினோத் (31 ) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி திருமணம் நடந்தது.

திருமணம் ஆன சில நாளில் கணவன் வினோத் மனைவியை வரதட்சணை கேட்டு தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து இளம்பெண் அவரது தந்தை அத்தியப்பனிடம் தகவல் தெரிவித்து வந்தார் . இதனால் அத்தியப்பன் அவரது மகளை சமாதானம் செய்து வைத்தார்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வினோத் அவரது மனைவியை டார்ச்சர் செய்ததாகத் தெரிகிறது. இதனால் தந்தை அத்தியப்பன் மகளை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.

ALSO READ | தகராறில் விபரீத முடிவெடுத்த கணவர்.. துக்கத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த மனைவி!

தந்தையின் வீட்டில் சோகமாகவே இருந்த மகள், கடந்த 30ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதை அறிந்த பெற்றோரும், உறவினர்களும் இளம்பெண்ணை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் மனமுடைந்த பெண்ணின் பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது, வரதட்சணை கொடுமையால் தான் தன் மகள் உயிரிழந்ததாக புகார் அளித்தனர்.

தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Local News, Namakkal, Suicide