நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்னை காரணமாக முத்துச்சாமி என்பவர் மீது அவரது மனைவி ரங்கநாயகி புகார் அளித்தார். முத்துசாமிக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஐயப்பன் என்பவர் காவல் நிலையத்திற்கு வந்தார். அதே போல ரங்கநாயகிக்கு ஆதரவாக அலெக்சாண்டர் என்பவர் வந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் ஐயப்பன், அலெக்சாண்டர் வழக்கறிஞரே இல்லை எனக் கூறியுள்ளார். வழக்கறிஞருக்கு படிக்காமல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புகார் குறித்து விசாரணை செய்தபோது அலெக்சாண்டர் வழக்கறிஞர் இல்லை என்பது தெரியவந்தது
மேலும் அவர் மோகனூர் சாலையில் முருகன் கோவில் அருகே உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்திருக்கிறார். எம்.ஏ. வரை படித்த அவர் மனநல ஆலோசராகவும் பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து அலெக்சாண்டரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating case, Namakkal