ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

வீடு அருகே பதுக்கப்பட்ட 1 டன் பட்டாசு.. அதிகாலையில் வெடித்த குடோன்.. 4 பேரை பலிவாங்கிய நாமக்கல் விபத்து!

வீடு அருகே பதுக்கப்பட்ட 1 டன் பட்டாசு.. அதிகாலையில் வெடித்த குடோன்.. 4 பேரை பலிவாங்கிய நாமக்கல் விபத்து!

நாமக்கல் தீ விபத்து

நாமக்கல் தீ விபத்து

நாமக்கல் மற்றும் பரமத்தியில் இருந்துவந்த தீயணைப்பு வீரர்கள் போராடி, தீயை அணைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அடுத்த மோகனூரில் வீடு அருகே உள்ள கிடங்கில் வைக்கப்பட்ட பட்டாசு வெடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 பேராக உயர்ந்துள்ளது.

மோகனூர் மேட்டு தெருவைச் சேர்ந்த தில்லை குமார், நாட்டு பட்டாசு விற்பனை செய்து வருகிறார். புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு விற்பனைக்காக வாங்கி வந்த ஒரு டன் பட்டாசை, தனது வீட்டின் அருகே உள்ள கிடங்கில் வைத்திருந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. பயங்கர வெடி சத்தம் கேட்க அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். கிடங்கு தீப்பிடித்து எரிவதை கண்ட அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நாமக்கல் மற்றும் பரமத்தியில் இருந்துவந்த தீயணைப்பு வீரர்கள் போராடி, தீயை அணைத்தனர்.

இடிபாடுகளுக்கு இடையே தில்லைக்குமாரின் சடலம் மீட்கப்பட்டது. கிடங்கிற்கு அருகாமை வீட்டிலும் தீப்பிடித்திருந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து, மூதாட்டி பெரிய அக்காளின் சடலமும் மீட்கப்பட்டது.

இந்த விபத்தில் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். நான்கு பேரும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர் வீட்டை சுற்றி குடியிருந்த கார்த்திகேயன் அன்பரசன் பழனியம்மாள் செந்தில்குமார் என்ற நால்வரும் படுகாயம் அடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்ய நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் மோகனூர் ஆய்வாளர் நாமக்கல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்

First published:

Tags: Fire, Fire accident, Fire crackers