ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

அடேங்கப்பா இவ்ளோ கோழி விற்பனையாச்சா! தீபாவளியை முன்னிட்டு டன் கணக்கில் கறிக்கோழி விற்பனை!

அடேங்கப்பா இவ்ளோ கோழி விற்பனையாச்சா! தீபாவளியை முன்னிட்டு டன் கணக்கில் கறிக்கோழி விற்பனை!

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த ஆண்டைவிட 50 லட்சம் கிலோ அதிகம். இருப்பினும் இந்த விற்பனையின் மூலம், ஒரு கிலோவுக்கு ரூ.25 வீதம் பண்ணையாளர்களுக்கு ரூ.60 கோடி இழப்பு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal | Namakkal

  நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் 2,500 டன் கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டதாக சங்க நிர்வாகி கூறினார்.

  தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

  இங்கு தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

  இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ஒரு கிலோ ரூ.88-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி, படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ.119-ஐ எட்டி உள்ளது. இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டை விட அதிக அளவில் கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

  இதையும் படிங்க | நாமக்கல் ரேஷன் கடைகளில் 200 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்.!

  கறிக்கோழியை பொறுத்தவரை ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.95 செலவாகிறது. தற்போது கொள்முதல் விலை, ரூ.119 என நிர்ணயம் செய்து இருந்தாலும், வியாபாரிகள் குறைவான விலைக்கு தான் கோழிகளை பிடிக்கின்றனர்.

  அதனால் ஒரு கிலோவுக்கு ரூ.25 வரை இழப்பு ஏற்படுகிறது.மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் 2,500 டன் கறிக்கோழி விற்பனையானது.

  கடந்த ஆண்டில் 50 லட்சம் கிலோ விற்பனை ஆனது. தற்போதைய தீபாவளி விற்பனையின் மூலம், ஒரு கிலோவுக்கு ரூ.25 வீதம் 2 நாட்களில் பண்ணையாளர்களுக்கு ரூ.60 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

  கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலைக்கே, வியாபாரிகள் கோழிகளை பிடித்தால், பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும் என கறிக்கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chicken, Namakkal