ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 1008 பால்குட அபிஷேகம் விழா... நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டுச் சென்ற பக்தர்கள்...

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 1008 பால்குட அபிஷேகம் விழா... நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டுச் சென்ற பக்தர்கள்...

நாமக்கல் -1008 பால் குடம் அபிஷேகம்

நாமக்கல் -1008 பால் குடம் அபிஷேகம்

Namakkal | 1008 பால்குடங்களை பக்தி பரவசத்துடன் பெண் பக்தர்கள்  எடுத்துக்கொண்டு ஊரில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கருவறையில் உள்ள ஸ்ரீ அக்னி  மாரியம்மனுக்கு நீண்ட வரிசையில் நின்று அபிஷேகம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த மிகவும் பிரசித்தி  பெற்ற நன்செய் இடையாறு ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் 1008 பால்குட அபிஷேக விழா நேற்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதத்தில் வரும் ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமையன்று பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இந்த பால்குடத்தை சுற்றுவட்டார எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள், பெண் பக்தர்கள் என அனைவரும் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி விட்டு அங்கிருந்து பால்குடம், தீர்த்தக்குடம், ஆகியவைகளை காவிரி ஆற்றங்கரையில் வைத்து பூஜை செய்தனர். பின்னர் அந்த 1008 பால்குடங்களை பக்தி பரவசத்துடன் பெண் பக்தர்கள்  எடுத்துக்கொண்டு ஊரில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கருவறையில் உள்ள ஸ்ரீ அக்னி  மாரியம்மனுக்கு நீண்ட வரிசையில் நின்று அபிஷேகம் செய்தனர்.

Also see... காவல் நிலையத்தில் தொடங்கிய உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி...

பின்னர் அக்னி மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றனர். மேலும் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் எட்டுப்பட்டி ஊர் தர்மகர்தாக்கள்  மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: ரவிசந்திரன், நாமக்கல்

First published:

Tags: Aadi, Namakkal