ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

தாயின் கண்முன்னே மிஷினில் சிக்கி பலியான பிஞ்சு குழந்தை.. நாமக்கல்லில் சோகம்!

தாயின் கண்முன்னே மிஷினில் சிக்கி பலியான பிஞ்சு குழந்தை.. நாமக்கல்லில் சோகம்!

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்

Namakkal baby death | நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஒலப்பாளையத்தில் நார் மில்லில் தாயின் கண்முன்னே மிஷினில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal | Paramathi

நாமக்கல் அருகே நார் மில்லில் தாய் கண்ணெதிரே மிஷினில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஒலப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தேங்காய் நார்மில் வைத்து நடத்தி வருகிறார். இவரது நார்மிலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாரம் அவருடைய மனைவி  மனிஷாதேவி தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது ஒன்றரை வயதில் ஆண் குழந்தை தீஸ்குமார் உள்ளது.

இந்நிலையில், மனிஷாதேவி தனது குழந்தை தீஷ்குமாரை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தீஷ்குமார்  ஓடிக்கொண்டிருக்கும் மிஷனின்  பெல்ட்டை பிடித்துள்ளார். அப்போது திடீரென குழந்தை மிஷினுக்குள் இழுத்து சென்றது. இதில் தாயின் கண்ணெதிரே குழந்தை தீஷ்குமார் மிஷினில் சிக்கி உடல் நசுங்கியது.

உடனடியாக அருகில் இருந்த அவரது தாய் மனிஷாதேவி மிஷினை நிறுத்தி குழந்தை தீஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். அப்போது குழந்தை தீஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பரமத்திவேலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் கண்ணெதிரே குழந்தை மிஷினில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ரவிக்குமார், நாமக்கல்.

First published:

Tags: Death, Local News, Namakkal, Tamil News