Home /News /nagapattinam /

மினி பஸ்ஸில் பிடித்த பாடலை வைக்காத டிரைவர் மீது கொலை வெறித் தாக்குதல் - போலீசார் விசாரணை

மினி பஸ்ஸில் பிடித்த பாடலை வைக்காத டிரைவர் மீது கொலை வெறித் தாக்குதல் - போலீசார் விசாரணை

பேருந்து ஓட்டுநர் நடத்துநர் மீது தாக்குதல்

பேருந்து ஓட்டுநர் நடத்துநர் மீது தாக்குதல்

Nagapattinam district News: நாகை அருகே பேருந்தில் ஒலிபரப்பான பாடல் பிடிக்காத ஆத்திரத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India
    நாகப்பட்டினத்தில் இருந்து ஆய்மழை கிராமத்திற்கு செல்லும் தனியார் மினி பேருந்தில் நாகை கோட்டைவாசல்படி பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒருவர் ஏறியுள்ளார். மினி பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் பேருந்தில் ஒலித்த பாடலை மாற்றி வேறு பாடல் வைக்குமாறு அந்த நபர் ஓட்டுனரிடம் கூறியுள்ளார்.

    ஓட்டுநர் வேறு பாடலை மாற்றுவதற்கு மறுத்த நிலையில், அந்த நபர் சிக்கல் பேருந்து நிலையத்திலேயே இறங்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஆய்மழை கிராமத்திற்கு சென்ற மினி பேருந்து அதே வழியாக மீண்டும் நாகை வந்துள்ளது.

    வேறு பாடல் வைக்காததால் ஆத்திரம் அடைந்து பேருந்தின் வருகைக்காக காத்திருந்த அந்த நபர், சிக்கல் ரயில்வே கேட் அருகே தனது நண்பர்கள் 7 பேர் கொண்ட கும்பலோடு காத்திருந்து பேருந்தை மடக்கி நிறுத்தியுள்ளார்.

    பேருந்தை நிறுத்திய வேகத்தில் பேருந்து ஓட்டுனர் பாரதி மற்றும் நடத்துனர் பாலமுருகன் ஆகிய இருவரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் தரதரவென இழுத்துச் சென்ற அந்த கும்பல், சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகளும், நடத்துநர் ரத்த காயங்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாக்குதலுக்கு உள்ளான தனியார் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவதும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக கீழ்வேளூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நாகை அடுத்துள்ள அகர ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜித் (27) என்பவரை கீழ்வேளூர் போலீசாரால் கைது செய்துள்ளனர்.

    Must Read : ‘நானும் நீதிபதிதான்... தொலைச்சிப்புடுவேன்’ என போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய மின்வாரிய அதிகாரி

    பேருந்தில் பிடித்த பாடலை வைக்காததால் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - பாலமுத்துமணி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Attack, Bus, Crime News, Nagapattinam, Songs

    அடுத்த செய்தி