ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

மீனவர்கள்

மீனவர்கள்

Fisherman | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India

நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் மற்றும் சக்திவேல் ஆகிய நான்கு பேரும் கோடியக்கரையில் இருந்து கடந்த டிசம்பர் 27ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் மீனவர்கள் நான்கு பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று அவர்களை கைது செய்தனர் .

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதங்களில் தமிழக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Fisher man, Nagai, Nagapattinam