முகப்பு /செய்தி /நாகப்பட்டினம் / தந்தையை நோக்கி கள்ளத் துப்பாக்கியால் சுட்ட மகன்... வேதாரண்யத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

தந்தையை நோக்கி கள்ளத் துப்பாக்கியால் சுட்ட மகன்... வேதாரண்யத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

கைதான கருணாநிதி

கைதான கருணாநிதி

Crime News | நாகை வேதாரண்யத்தில் நாட்டுத் துப்பாக்கியால் தந்தையை மகன் சுட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagapattinam, India

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியை சோ்ந்தவர் பன்னீா்செல்வம் (65) விவசாயி. இவரது மகன் கருணாநிதி(45). கருணாநிதிக்கும் அவரது மனைவி புனிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் புனிதா கணவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. புனிதா பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் காரணம் என கூறி கருணாநிதி தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் இதுகுறித்து பன்னீர்செல்வத்திடம் நேற்று கருணாநிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த கருணாநிதி தான் அனுமதியில்லாமல் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் தனது தந்தை என்றும் பாராமல் பன்னீர்செல்வத்தை நோக்கி சுட்டுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.

அப்போது துப்பாக்கி குண்டுகள் குறிதவறி அருகில் இருந்த தண்ணீர் டேங்கில் பாய்ந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக பன்னீர்செல்வம் உயிர் தப்பினார். இதையடுத்து, அங்கிருந்து தப்பித்து இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் பன்னீர்செல்வம் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.

இதையும் படிங்க : கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்... 53 வருட திருமண வாழ்க்கை... சாவிலும் இணைபிரியாத தம்பதி...!

மேலும், வேம்பதேவன்காடு, புளியங்குளத்தில் கிடந்த நாட்டு கள்ளத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் தந்தையை மகன் கள்ளத்துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : பாலமுத்துமணி - வேதாரண்யம்

First published:

Tags: Crime News, Local News, Nagapattinam