Home /News /nagapattinam /

செல்போன் கேம்: தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை - வேதாரண்யம் அருகே சோகம்

செல்போன் கேம்: தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை - வேதாரண்யம் அருகே சோகம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Nagapattinam district News: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அதிக நேரம்  செல்போனில் கேம் விளையாண்டதை தாய் கண்டித்ததால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்தவர்கள் காளிமுத்து-வாசுகி தம்பதி. அவர்களுக்கு இரண்டு பெண், இரண்டு ஆண் என மொத்தம் 4 பிள்ளைகள். காளிமுத்து இறந்து 10 வருடங்கள் ஆன நிலையில், வாசுகி தனது பிள்ளைகளை கூலி வேலைக்கு சென்று வளர்த்து வருகிறார்.

    இவருடைய 17 வயதுடைய  இளைய மகள் தேத்தாக்குடி தெற்கு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் அதிக நேரம் செல்போனில்  கேம் விளையாடுவதைப் பார்த்த தாய், தன் மகளை கண்டித்து திட்டியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பின்னர்,  வாசுகி வழக்கம்போல தனது அன்றாட பணியான கூலி வேலைக்கு சென்று விட்ட நிலையில், தனியாக இருந்த மாணவி விஷத்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர்  உடனடியாக அந்த மாணவியை மீட்டு வேதாரண்யம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    Must Read : வெள்ளத்தில் மிதக்கும் கூடலூர்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

    அங்கு  மாணவியை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த, உறவினர்கள் கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதிக நேரம் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மாணவி எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் - பாலமுத்துமணி




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Mobile phone, Nagapattinam, Suicide, Video Game

    அடுத்த செய்தி